மேலும் அறிய

2023-ல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? பட்டியலில் 5 தமிழ் படங்கள்..

நடப்பாண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு பிறந்ததை அடுத்து 2023ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய திரைப்படங்களின் பட்டியலை, ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 20 படங்களை உள்ளடக்கிய அந்த பட்டியலில், 5 தமிழ்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில் இரண்டு திரைப்படங்கள் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள, வாரிசு மற்றும் தளபதி 67 என்பது குறிப்பிடத்தக்கது.

1. பதான்

அதில் முதல் இடத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ள பதான் திரைப்படம் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் வெளியாக உள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2. புஷ்பா - 2

இரண்டாவது இடத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது. முதல் பாகம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

3. ஜவான்

மூன்றாவது இடத்தில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் திரைப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

4,5வது இடங்களில் பிரபாஸ் திரைப்படங்கள்:

நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில், பிரபாஷ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ஆதி புருஷ் மற்றும் சலார் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பிரபாஸிற்கு, இந்த படங்கள் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.வாரிசு:

அந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் விஜய் நடிப்பில் வரும் 11ம் தேதி வெளியாக உள்ள வாரிசு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதுமே அப்படத்தின் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்ட நிலையில், அஜித்தின் துணிவு படத்துடன் நேரடியாக மோத உள்ளதால் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.

7. கப்ஜா

ஏழாவது இடத்தில் உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் கன்னட படமான கப்ஜா உள்ளது.

8. தளபதி 67

எட்டாவது இடத்தில் இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்காத விஜயின் 67வது திரைப்படம் இடம்பெற்றுள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜுடன் விஜய் கைகோர்த்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

9,10,11 மற்றும் 12 ஆகிய இடங்களில் முறையே,  தி ஆர்செஸ்,  டன்கி, டைகர் 3 மற்றும் கிசி கா பாய் கிசி கா ஜான் ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 13வது இடத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் உள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

14வது இடத்தில் அனிமல், 15வது இடத்தில் ஏஜென் ஆகிய திரைப்படங்கள் இருக்க, 16வது இடத்தில் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இடம்பெற்றுள்ளது. அதைதொடர்ந்து, 17வது இடத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் தயாராக உள்ள வாடிவாசல் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுதியாக நடப்பாண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களின் பட்டியலில், 18,19 மற்றும் 20 ஆகிய இடங்களில் ஷெஷாதா, படே மியான் சோட்டே மியான் மற்றும் போலா ஆகிய திரைப்படங்கள் உள்ளதாக, ஐஎம்டிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget