மேலும் அறிய

Mookuthi Amman 2: தீய சக்தியை எதிர்க்க வரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2! அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு!

Mookuthi Amman 2: ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

ரேடியோ ஜாக்கியாக இருந்து 'கிராஸ் டாக்' நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி. அவரின் பேச்சு திறமையை ரசிக்கவே ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து திரைப்படத்தில் காமெடியனாக, ஹீரோவின் நண்பனாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

'தீயா வேலை செய்யணும் குமாரு'. 'நானும் ரவுடி தான்' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தன. 

Mookuthi Amman 2: தீய சக்தியை எதிர்க்க வரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2! அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு!

மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட ஆர்ஜே பாலாஜி, எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் தொடர்ந்து வீட்ல விசேஷம், மூக்குத்தி அம்மன், சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கென செட்டாகும்  ஸ்டைல்  படங்களை மிக சிறப்பாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்ஜே பாலாஜி. 

நடிகராக களமிறங்கி வெற்றி கண்ட பிறகு 'மூக்குத்தி அம்மன்' படம் மூலம் இணை இயக்குநராக பரிணாமம் எடுத்தார். நேரடியாக நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய முதல் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பு, ஆர்ஜே பாலாஜியின் டைமிங் காமெடி, ஸ்வாரஸ்யமான திரைக்கதை என படத்துக்கு ஏராளமான பிளஸ் பாய்ண்ட் அமைந்து இருந்தன. 

Mookuthi Amman 2: தீய சக்தியை எதிர்க்க வரும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2! அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு!

இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன் 2' உருவாக உள்ளது என்ற தகவல்  ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் எங்கும் வைரலானது. நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படி பல வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது 'மூக்குத்தி அம்மன் 2 ' குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். 'தீய சக்தி தலைதூக்கும் போது அம்மன் அங்கே காட்சியளிப்பார்' என்ற கேப்ஷனுடன் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மீண்டும் ஒரு கலக்கலான காம்போவில் ஒரு சூப்பர் ஹிட் வெற்றியுடன் உருவாக இருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget