மேலும் அறிய

காத்துவாங்கிய திரெளபதி 2 காட்சிகள்...காசு கொடுத்து படையை இறக்கிய மோகன் ஜி

திரெளபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பணம் கொடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார் மோகன் ஜி

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மோகன் ஜி இயக்கியுள்ள திரெளபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் வருத்தம் தெரிவித்து மோகன் ஜி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட அடுத்த சில நாட்களில் படத்திற்கு தீவிரமாக பெயிட் ப்ரோமோஷன் செய்தும் வருகிறார். இதனை ரசிகர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள்.

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திரெளபதி 2 , மங்காத்தா (ரீரிலீஸ்) , ஹாட்ஸ்பாட் 2 மச் , ஜாக்கி ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகின. இதில் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரியவில் வரவேற்பு கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். இதனால் மற்ற படங்கள் வசூல் ரீதியாக பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. ஜாக்கி திரைப்படம் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. அதே போல் ஹாட்ஸ்பாட் 2 மச் படத்திற்கு குறைவான கூட்டமே காணப்படுகிறது. மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரெளபதி 2 திரைப்படமும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

சரித்திர படமாக உருவாகியிருந்தாலும் திரெளபதி 2 படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் எந்த வரவேற்பும் இருக்கவில்லை. மேலும் படம் பார்த்தவர்களும் நெகட்டிவ் விமர்சனங்களையே வழங்கியுள்ளார்கள். சுய சாதிப் பெருமை , வழக்கொழிந்து போன காட்சியமைப்புகள் , சுமாரான வி.எஃப்.எக்ஸ் என படத்தின் குறைபாடுகளை விமர்சகர்கள் சுட்டிகாட்டியுள்ளார்கள். 

மோகன் ஜி ஆதங்கம்

திரெளபதி 2 படத்திற்கு வரவேற்பு கிடைக்காதது குறித்து படத்தின் இயக்குநர் மோகன் ஜி தனது ஆதங்கத்தை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார். தான் உலகத்தரம் வாய்ந்த ஒரு படத்தை வெறும் 30 நாட்களில் எடுத்துள்ளதாகவும் மற்றவர்களைப் போல் 150 நாட்கள் படமெடுத்து ஏமாற்றவில்லை என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். இந்த படத்திற்கு தனக்கு போதுமான பட்ஜெட் இல்லையென்றும் 100 கோடி பட்ஜெட் கொடுத்திருந்தால் பாகுபலி மாதிரியான ஒரு படத்தை தன்னால் கொடுத்திருக்க முடியும் என்று மற்றொரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். 

பணம் கொடுத்து கூட்டம் கூட்டிய மோகன் ஜி 

மேலும் கடந்த சில  நாட்களாக திரெளபதி 2 படத்திற்கு தீவிரமாக பெயிட் ப்ரோமோஷன்களும் நடந்து வருகின்றன. ஐ.எம்.டி.பியில் படத்திற்கு 9 புள்ளிகள் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் மோகன் ஜி பகிர்ந்துள்ளார். இயக்குநருக்கு ஆதரவானவர்கள் மூலமாக மொத்தமாக பணத்தை கொடுத்து மக்களை கூட்டம் கூட்டி படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதாக பல வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் மோகன் ஜியை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!
சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget