மேலும் அறிய

Mayilsamy Death: முன்கூட்டியே இறப்பை அறிந்த மயில்சாமி... மேடையில் கூறிய வார்த்தை... கண்கலங்கும் ரசிகர்கள்  

இறப்பு குறித்தும் தனது ஆசை குறித்தும் மிகவும் வெளிப்படையாக சில மாதங்களுக்கு முன்னரே திரைப்பட விழா ஒன்றில் மேடையில் பேசிய மயில்சாமியின் வீடியோ தற்போது அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மரணம் திரையுலகத்தினர் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நல்ல குணம் படைத்த மனிதர் :

1984ம் ஆண்டு வெளியான 'தாவணி கனவுகள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. சிறிய வேடங்களில் நடித்தாலும் மிகவும் நிறைவாக நடிக்க கூடிய இவர் கமல், ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். விவேக், வடிவேலுவுடன்  கூட்டணி காம்போக்களிலும் பட்டையை கிளப்பியவர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்து காட்டியவர். மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் நடிகர் மயில்சாமி. மேலும் தேவை என கேட்போருக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் மயில்சாமி திகழ்ந்து வந்தார். 

Mayilsamy Death: முன்கூட்டியே இறப்பை அறிந்த மயில்சாமி... மேடையில் கூறிய வார்த்தை... கண்கலங்கும் ரசிகர்கள்  

மாரடைப்பால் உயிரிழந்தார் :

மகா சிவராத்திரி தினத்தன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடு முடித்துக்கொண்டு வீடு திரும்பியவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.  

கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் :

நடிகர் மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நேரில் வர இயலாதவர்கள் சோசியல் மீடியா மூலம் தங்களின் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். 

இறப்பு குறித்து பதிவு செய்த மயில்சாமி :
 
நடிகர் மயில்சாமியின் இறப்பால் அதிர்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவர் பட நிகழ்ச்சி ஒன்றில் தனது இறப்பு குறித்து பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. " அதிக நாட்கள் நான் உயிருடன் இருக்க வேண்டும் என ஆசைப்படவில்லை. ஆனால் நான் இருக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அது தான் என்னுடைய ஆசை" என அவர் மேடையில் பேசியிருந்தார். 

உறவை கொண்டாடும் மனிதன் :

விவேக், சத்யராஜ், சரத்குமார், பி. வாசு என அனைவரிடமும் மிகவும் நெருங்கி சுமுகமாக பழகும் நடிகர் மயில்சாமி, யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக அவர்களிடம் பேசுவார். அதே போல இவருக்கு ஏதாவது உதவி என்றாலும் அவர்கள் ஓடி வருவார்கள். அந்த அளவிற்கு அனைவருடன் சுமுகமான உறவை தக்கவைத்து கொண்டவர்.  

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget