மேலும் அறிய

Mansoor Ali Khan Trisha Video: ”அரசியல் ரீதியாக பழிவாங்கவே என்மீது அவதூறு” - மன்சூர் அலிகான் விளக்கம்

Mansoor Ali Khan Trisha Video: “என் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள்" என்று மன்சூர் அலிகான் திரிஷா வீடியோ பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

Mansoor Ali Khan Trisha Video: அரசியல் ரீதியாக பழிவாங்கவே தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக நடிகர் மன்சூர் அளிகான் விளக்கம் அளித்துள்ளார். 

மன்சூர் அலிகான் பேச்சு:

 
விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அண்மையில் பேட்டியளித்த அவர், லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷாவுக்கு நெருக்கமாக நடிக்க தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பேசினார். மேலும், அந்த காலத்தில் நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் போல் தற்போது தனக்கு கிடைப்பதில்லை என்றதுடன், வில்லனாக பெண்களுக்கு எதிராக நடிப்பதை விரும்புவதை போல் பேசி இருந்தார். 
 
மன்சூர் அலிகானின் வெறுப்பு மிகுந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் மன்சூர் அலிகான் பேச்சு அருவருக்கத்தக்க விதமாக இருப்பதாகவும், இதுபோன்ற கீழ்த்தரமான நபருடன் இனிமே நடிக்க மாட்டேன் என த்ரிஷா கூறி இருந்தார். த்ரிஷாவை குறிப்பிட்ட மன்சூர் அலிகான் பேசியதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 
 

அரசியலுக்கு வர்ற நேரம்:

 
இந்த நிலையில், அரசியல் ரீதியாக பழிவாங்கவே தன்மீது அவதூறு பரப்புவதாக நடிகர் மன்சூர் அளிகான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “என் மீது அரசியல் ரீதியாக பழிவாங்க நினைக்கிறார்கள்! என் மீது அவதூறு பரப்பும் நண்பர்கள் முதலில் 10 நாள் முன்பு நான் அளித்த அரசியல் சந்திப்பு முழு வீடியோவை பார்த்துவிட்டு விமர்சிக்கவும். தனிநபர் மீது எந்தப் பேச்சும் இல்லை. சினிமா நடிப்பு பற்றி தான். "வாய்மை வெல்லும்" என கூறியுள்ளார். 
 
முன்னதாக, 'அய்யா' பெரியோர்களே. திடிர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். 
 

மரியாதை கொடுக்குறவன்:

 
அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும் 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும் சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா” என இன்ஸ்டகிராமில் பகிர்ந்து இருந்தார். 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mansoor Ali Khan (@mansoor_alikhan_offl)

 
 

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget