மேலும் அறிய

அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!

தமிழ் சினிமாவில் நடிகை அசின் விட்டுச் சென்ற இடத்தை மமிதா பைஜூ பிடித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

மலையாள சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜூ, தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். குறிப்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், “தமிழ் சினிமாவின் அடுத்த அசின் மமிதா பைஜூதான்என்ற கருத்தை பல ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில் அசின் மற்றும் மமிதா பைஜூவை ஒப்பிட்டு ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் நேற்று முதல் பதிவிட்டு வருகிறார்கள். 

இன்று வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள மமிதா பைஜூவின் தோற்றத்தையும், 2005-ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படத்தில் அசின் நடித்த புகழ்பெற்றரஹதத்துல்லாபாடல் காட்சிகளையும் இணைத்து ரசிகர்கள் பல எடிட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் பெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவில் அசின் பிடித்த இடம் மிகவும் தனித்துவமானது. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவர்ந்த நடிகையாக உருவெடுத்தார். குறிப்பாக கவர்ச்சியை விட இயல்பான நடிப்பு, எளிமையான அழகு, தன்னம்பிக்கை மிக்க கதாபாத்திரங்கள் ஆகியவை அசினை மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்தின.

அவரது திரைப்பயணம் உச்சத்தில் இருந்தபோதே பாலிவுட்டுக்கு சென்ற அசின், பின்னர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார். தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எடுத்த இந்த முடிவு பல ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அசின் போன்ற இயல்பான திரைமுகத்தைக் கொண்ட நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி எழுந்து வந்தது.

அந்த இடத்தை நிரப்பக்கூடிய நடிகையாகவே தற்போது மமிதா பைஜூவை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற அவர், அதிகமான மேக்கப் இல்லாத இயல்பான தோற்றம், துறுதுறுப்பான உடல் மொழி மற்றும் எளிதில் ரசிகர்களை கவரும் நடிப்பு ஆகியவற்றால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இதன் காரணமாகவே அசினின் ஆரம்பகால திரைபயணத்தை நினைவுபடுத்தும் நடிகையாக மமிதா பைஜூவை பலர் குறிப்பிடுகின்றனர். ஒரு சில பாடல் காட்சிகள் அல்லது சமூக வலைதள எடிட்கள் மட்டுமே இந்த ஒப்பீட்டுக்கு காரணம் அல்ல. ரசிகர்களின் பார்வையில் அசின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பக்கூடிய இயல்பான நட்சத்திரமாக மமிதா பைஜூ உருவெடுத்து வருவதுதான் இந்த விவாதத்தின் மையமாக உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget