மேலும் அறிய

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி வீட்டில் பெரும் சோகம்...! ஆறுதல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்..!

நாளை புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் , இஸ்லாமியரான மம்மூட்டியின் தாயார் உயிரிழந்தது அவரது குடும்பத்தார், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகர் மம்மூட்டியின் தாயார் ஃபாத்திமா இஸ்மாயில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 93. மலையாள சினிமா என்றதும் நமது நியாபகத்துக்கு வரும் இரண்டு பெயர்கள் மம்மூட்டி, 
மோகன்லால்.

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம்

மலையாள சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் நடிகர் மம்மூட்டி. 1971 ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலிச்சகல் எனும் மலையாளத் திரைப்படம்  மூலம் சினிமாவில் அறிமுகமானார். 
மம்மூட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமா உலகில் டாப் ஸ்டாராக கோலோச்சி வருகிறார்.

மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கோலோச்சி வருகிறார். இந்நிலையில், மம்மூட்டியின் தாயார் ஃபாத்திமா இஸ்மாயில் இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஆறுதல் தெரிவிக்கும் திரையுலகம்

உடல்நலக்குறைவால் ஏற்கனவே ஃபாத்திமா இஸ்மாயில் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு செம்பு ஜூம்மா மஸ்ஜித் கப்ரிஸ்தானில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

நாளை உலகம் முழுவதும் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் , இஸ்லாமியரான மம்மூட்டியின் தாயார் இன்று உயிரிழந்தது அவரது குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் மம்மூட்டியின் தாயார் இறப்புக்கு மலையாளத் திரையுலகினர், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சசி தரூர் ட்வீட்

முன்னதாக காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் மம்மூட்டிக்கு ஃபோன் செய்து வருத்தம் தெரிவித்ததாகவும், அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மலையாள சினிமா ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் இணைய பக்கங்களில் மம்முட்டிக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இறுதியாக மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில், வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் நல்ல விமர்சனங்களைப் பெற்று கவனம் ஈர்த்தது.

மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மம்மூட்டி 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமா போலவே தமிழ் சினிமா ரசிகர்களாலும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வரும் மம்மூட்டி,  அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு உள்ளிட்ட பல நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக தெலுங்கில் நாகார்ஜூன் மகன் அகில் உடன் மம்மூட்டி நடித்துள்ள ஏஜெண்ட் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
Embed widget