மேலும் அறிய

21 Years of Run: ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய ‘சாக்லேட் பாய்’ மாதவன்.. 21 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ரன்’ படம்...!

சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிய ‘ரன்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிய ‘ரன்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

லிங்குசாமியுடன் இணைந்த மாதவன் 

2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக்,  அதுல் குல்கர்னி , ரகுவரன் மற்றும் அனு ஹாசன் ஆகியோர் நடிப்பில் ‘ரன்’ படம் வெளியாகியிருந்தது. அலைபாயுதே மற்றும் மின்னலே படம் மூலம் இளைஞர்களை கவர்ந்த மாதவனும், ஆனந்தம் படம் மூலம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த லிங்குசாமியும் இணைந்ததால் இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வித்யாசாகர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 

படத்தின் கதை 

கல்லூரியில் சேர்வதற்காக திருச்சியில் இருந்து சென்னையில் திருமணமாகி இருக்கும் அக்கா அனுஹாசன் வீட்டுக்கு வருகிறார். மாமா ரகுவரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். இதற்கிடையில் பஸ்ஸில் பார்க்கும் மீராஜாஸ்மின் மீது முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறார் மாதவன். மீரா ஜாஸ்மின் அண்ணன் அதுல் குல்கர்னி மிகப்பெரிய ரவுடி. தன் அண்ணனிடம் இருந்து காப்பாற்ற எச்சரித்தாலும் மாதவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அண்ணனை எதிர்க்கும் மாதவனின் தைரியம் பிடித்துப்போக மீராஜாஸ்மினும் காதலிக்க தொடங்குகிறார். இறுதியாக இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும். 

வித்யாசாகரின் மாயஜாலம் 

ரன் படத்தின் பாடல் வரிகளை நா. முத்துக்குமார் , பா.விஜய் , தாமரை , யுகபாரதி , அறிவுமதி மற்றும் விவேகா  எழுத வித்யாசாகர் இசையமைத்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பது போல அசத்தலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. குறிப்பாக மாதவனின் அறிமுக பாடலாக வரும் தேரடி வீதியிலே பாடலில் ஒவ்வொரு மாநில பெண்களையும் நா.முத்துகுமார் அழகாக வர்ணித்திருப்பார். 

அதேபோல் நடிகர் விவேக்கின் காமெடி சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைத்தது. வீட்டில் அப்பாவை கிண்டல் செய்து விட்டு தான் அவஸ்தை படும்போதெல்லாம் அப்பாவுடனான உரையாடலை நினைத்து ஃபீல் பண்ணும் காட்சி என அட்டகாசப்படுத்தியிருப்பார். 

கூடுதல் தகவல்கள் 

இயக்குநர் மணிரத்னத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு ரன் படத்தில் நடிக்க மாதவன் முடிவு செய்தார். இப்படத்துக்காக அவர் எட்டு கிலோ எடை குறைந்தார்.  ஜோதிகா முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இறுதியாக மீரா ஜாஸ்மினின் அறிமுகப்படமாக ரன் அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டைப் பெற்ற ரன் படம் மாதவனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
Embed widget