மேலும் அறிய

mysskin : எனக்கு நடிப்பதில் ஆர்வம் குறைவு! விக்னேஷ் சிவன் சொன்ன பிரமாதமான கதை: மிஸ்கின் நடிக்கும் அடுத்தப் படம் என்னத் தெரியுமா

மாவீரன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பற்றாக்குறையோ என்னவோ இயக்குநர்கள்  எல்லாம் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். கெளதம் வாசுதேவ் மேனன், பாலாஜி சக்திவேல், மகேந்திரன், பாரதிராஜா, ஆகியவர்களைத் தொடர்ந்து தற்போது தற்போது நடிகராக மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறார் மிஸ்கின்.  லியோ, மாவீரன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் இயக்குநர் மிஸ்கின்.

மிஸ்கின்

தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தைக் கொண்ட இயக்குநர்களில் மிஸ்கினும் ஒருவர். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியப் படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டார். யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பிசாசு, சைக்கோ, துப்பறிவாளன் ஆகியப் படங்களில் தனது தனித்துவமான ஒரு ஸ்டைலை உருவாக்கினார் மிஸ்கின். தற்போது மிஸ்கின் இயக்கியிருக்கும் திரைப்படம் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம். ஆண்ட்ரியா இந்தப் படத்தின் கதாநாயகியாக  நடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் குறித்தான தகவல் வெளியாக இருக்கிறது.

நடிகராக மிஸ்கின்

படங்களை இயக்குவது மட்டுமில்லாமல்  நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் மிஸ்கின். சவரகத்தி, சூப்பர் டீலகஸ் ஆகியப் படங்களில் தனது கதாபாத்திரங்களை திறம்பட நடித்திருக்கிறார். மிஸ்கினின் நடிப்பிற்கு தனி ரசிகர்களே இருக்கிறார்கள். தற்போது மிஸ்கின் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் மடோன் அஸ்வின் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய  வில்லனாக நடித்திருக்கிறார் மிஸ்கின்.

அடுத்தது என்ன

அண்மையில் பேட்டி ஒன்றில் தான் நடிக்க இருக்கும் அடுத்தப் படத்தை பற்றியான தகவலை கசிய விட்டிருக்கிறார். ”போடா போடி, நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகியப் படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன்  இயக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்கலாம்” என்கிற தகவலை வெளியிட்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் தன்னிடம் ஒரு அற்புதமான கதையை சொல்லியிருப்பதாகவும் அது தனக்கு அதிகம் பிடித்திருந்ததாகவும் மிஸ்கின் கூறியுள்ளார்.

நடிப்பில் ஆர்வம் இல்லை

நடிப்பதில் தற்போது பிஸியாக தோன்றும் மிஸ்கின் தான் எழுதுவதில் தான் அதிக பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனக்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லையென்கிற உணமையைக் கூறியுள்ளார். நடிப்பதற்காக தான் தனியாக நேரம் எடுத்துக்கொண்டு அதற்கு உழைப்பு செலுத்த வேண்டியதாக இருப்பதாகவு தெரிவித்தார் மிஸ்கின்.

மாவீரன்

மண்டேலா படத்தை  இயக்கி தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் படம் மாவீரன். சிவகார்த்திகேயன் , மிஸ்கின், அதிதி ஷங்கர், மிஸ்கின் , யோகி பாபு ஆகியவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை 14 ஆம் தேதி மாவீரன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget