மேலும் அறிய

Maanaadu | மாநாடு டிரைலரை வெளியிடும் பிரபலம்! நன்றி தெரிவித்த வெங்கட் பிரபு!

காலை சரியாக 11 மணிக்கு மாநாடு டிரைலர் வெளியாக உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் மலையாள டிரைலரை முன்னணி நடிகரும் , தமிழ் ரசிகர்களை அதிகம் கொண்டவருமான நடிகர் நிவின் பாலி வெளியிடுவார் என மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். சரியாக அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநாடு படத்தின் டிரையிலரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் நிவின் பாலி வெளியிடவுள்ளார். இந்த அறிவிப்பை ரீட்வீட் செய்த இயக்குநர் வெங்கட் பிரபு, நிவின் பாலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞராக வலம் வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷினி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஒய்.ஜி.மகேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதுமே, சிம்பு நேரத்திற்கு வந்து நடித்து கொடுக்கமாட்டார் என்று சொல்லப்பட்டது. அதுபோலவே, சிம்புவும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்களும் சிம்பு ஏன் இப்படி ஒரு நல்ல படத்தில் நடிக்காமல், காலம் தாழ்த்துகிறார் என்று புலம்பினார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

சிம்பு நடிப்பார் என்று நம்பிக்கையோடு இருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். அதன்பிறகு, உடல் எடையை குறைத்த சிம்பு படத்திற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.அதன்பிறகு ‘மாநாடு’ படம் மீண்டும் தொடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . யாரும் எதிர்பாராத வகையில், சரியான நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு ‘மாநாடு’ படத்தை நடித்து கொடுத்து முடித்தார். மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கடந்த 11-ஆம் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மாநாடு, அண்ணாத்த, தீபாவளி ரேஸில் குதிக்க உள்ளது ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

‘அன்பில் அவன்’ பட விழாவில் அசோக் செல்வன் முதல் ப்ரீத்தி முகுந்தன் வரை பகிர்ந்த அனுபவங்கள்!
‘அன்பில் அவன்’ பட விழாவில் அசோக் செல்வன் முதல் ப்ரீத்தி முகுந்தன் வரை பகிர்ந்த அனுபவங்கள்!
பிரேமம் இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்!
பிரேமம் இயக்குநர் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? ஜேசன் சஞ்சய் சொன்ன காரணம்!
அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வெளியே வரவில்லை...கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்
அந்தரங்க வீடியோ கசிந்ததால் 4 நாட்கள் வெளியே வரவில்லை...கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்
The Paradise Review : நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சகர்கள் சொல்வது என்ன
The Paradise Review : நானி நடித்துள்ள தி பாரடைஸ் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சகர்கள் சொல்வது என்ன

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
Chennai ExpressWay: 106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
106KM நீளத்திற்கு 6 வழிச்சாலை..! கிளம்பாக்கம் டூ திண்டிவனம், 120KM ஸ்பீட் - செங்கல்பட்டு ட்ராஃபிக் ஓவர்
Fishermen Alert: ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
ஆழ்கடல் மீனவர்களுக்கான எச்சரிக்கை..! எந்தெந்த பகுதிகளுக்கு இன்று செல்லக்கூடாது - கடலோர மாவட்ட வானிலை
Embed widget