Simbu Statement: “நான் சிந்திய கண்ணீரை தரையில் விழவிடாமல் தாங்கி” : ரசிகர்களுக்கான கடிதத்தில் உருகிய சிம்பு
”எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. "மாநாடு” படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.” - சிம்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் மாநாடு ஏகப்பட்ட தடங்கல்களுக்கு பிறகு கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மாநாடு படத்துக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதையும், காட்சியமைக்கப்பட்ட விதமும் அருமையாக இருக்கிறதென ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறதெனவும், சிம்புவுக்கு இந்தப் படம் பக்கா கம்பேக் எனவும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்நிலையில், படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து சிம்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ” இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் "மாநாடு". எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. "மாநாடு” படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.
இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட் பிரபு, அனைந்து தொழில் நுட்பக் கலைஞர்கள், மாநாடு படக்குழு, என் தாய், தந்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் இரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன். நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால் பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே.
ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thank you for all the love ❤️ #Maanaadu #MaanaaduBlockbuster #SilambarasanTR 🙏🏻 pic.twitter.com/JJMynnQE8R
— Silambarasan TR (@SilambarasanTR_) November 29, 2021
இந்நிலையில் படம் வெளியாகி 4 நாள்களில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் மாநாடு வசூலித்துள்ளது. மேலும் இதே வேகம் தொடர்ந்தால் மாநாடு படம் விரைவில் 50 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்