மேலும் அறிய

Maamannan Update: நீண்ட நாள் காத்திருப்பு.. மாமன்னன் குறித்த அப்டேட்டை வெளியிட்ட உதயநிதி.. என்ன தெரியுமா?

இன்று மாலை 6 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மாமன்னன் குறித்த முதல் அப்பேட்டை வெளியிட்டார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது ‘மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வருகிறார். இவருக்கு துணையாக நடிகை கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், நீண்ட நாட்களுக்கு வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

யாரும் எதிர்பார்க்காத வேளையில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இந்த படத்தில் மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளார். மேலும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பும், ஆர்.கே எடிட்டிங் பணிகளை மேற்கொள்கின்றனர்.

 தகவலின்படி, இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும், நடிகர் வடிவேலும் இந்தப் படத்தில் எம்.எல்.ஏவாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரது மகனாகவும் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.  மேலும், கௌரவ வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. 

இந்தநிலையில், கடந்த 6 மணி நேரத்திற்கு முன்னதாக மாமன்னன் படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிந்திருந்தார். அதன்படி, சரியாக மாலை 6 மணிக்கு மாமன்னன் குறித்த அப்பேட் வெளியானது. 

அதில், மாமன்னன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி வெளியிட்ட போஸ்டரில், எதிரெதிரே உதயநிதி மற்றும் வடிவேல் நிற்பது போலவும், அவர்களின் இரண்டு உருவங்கள் ஒன்றாக சந்தித்து தலை ஒன்றாக இருப்பது போலவும் இருந்தது. 

மாமன்னன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே முடிவடைந்ததாக தகவல் வெளியான நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் டப்பிங் வேலைகள் நிறைய இருப்பதால் படம் வெளியாக தாமதம் ஆனதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த சூழலில் மாமன்னன் படம் குறித்த முதல் அப்டேட் வெளியானது உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மாமன்னன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் ஒருபுறம் நடக்க இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றொருபுறம் தன் அடுத்த படமான ‘வாழை’ படத்தின் முதற்கட்ட பட்டப்பிடிப்பை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget