மேலும் அறிய

Maamannan First Single : இசை புயலுடன் இணைந்த வைகை புயல்... 'மாமன்னன்' பர்ஸ்ட் சிங்கிள்... தேதியை அறிவித்த படக்குழு

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல் முறையாக வைகை புயல் வடிவேலு பாடியுள்ள 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு.  


பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வரும் திரைப்படம் 'மாமன்னன்'.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதான கதாபாத்திரமாக வைகை புயல் வடிவேலு நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் தேனி ஈஸ்வர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.

Maamannan First Single : இசை புயலுடன் இணைந்த வைகை புயல்... 'மாமன்னன்' பர்ஸ்ட் சிங்கிள்... தேதியை அறிவித்த படக்குழு

ஃபர்ஸ்ட் சிங்கிள் :

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'மாமன்னன்' படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் மே 19ம் தேதி வெளியாகவுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கவிஞர் யுகபாரதி எழுத்தில் வைகை புயல் வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார். இதன் அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடல் என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில்  வடிவேலு:


வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். இளையராஜாவின் இசையில் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் இடம்பெற்ற 'போடா போடா புண்ணாக்கு' என்ற பாடல் மூலம் பாடகரானார். அதனை தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, டி.எஸ்.பி என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள வடிவேலு முதல் முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'மாமன்னன்' படத்தில் பாடியுள்ளார். அது முதல் சிங்கிள் பாடலாக மே 19ம் தேதி வெளியாகவுள்ளது.    
 
 
Maamannan First Single : இசை புயலுடன் இணைந்த வைகை புயல்... 'மாமன்னன்' பர்ஸ்ட் சிங்கிள்... தேதியை அறிவித்த படக்குழு

ரஹ்மான் போஸ்ட் :
 
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் வடிவேலுவுடன் இணைந்து ரெக்கார்டிங் செய்த போது எடுத்த புகைப்படத்தையும் அந்த அனுபவம் குறித்தும் பதிவு ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். "வடிவேலுவுடன் பாடல் பதிவு செய்த போது அவர் எங்களை சிரிக்க வைத்த அனுபவம் மறக்க முடியாதது' என பதிவிட்டு இருந்தார். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget