(Source: ECI | ABP NEWS)
"ரொம்ப நன்றி காயத்ரி" மனைவியை புகழ்ந்து தள்ளிய லப்பர் பந்து டைரக்டர்!
லப்பர் பந்து திரைப்பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து தனது மனைவி தன் வாழ்வில் வருவதற்கு ஒரு மாதம் தாமதமாகியிருந்தால் சினிமாவை விட்டே விலகியிருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கடந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் லப்பர் பந்து. கிராமத்து பின்னணியில் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியிருந்த இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து விழா ஒன்றில் பேசியதாவது,
காதல் திருமணம்:
"நான் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணேன். எனக்கு சாப்பாடு போட்டு, எனக்கு ட்ரெஸ் எடுத்து கொடுத்தது, ட்ரெஸ்னா நல்ல ட்ரெஸ், நல்ல சாப்பாடு இது மாதிரி. நான் சினிமாவை விட்டுப் போயிடக்கூடாதுனு நம்பிக்கை இருக்கனும்னு இப்படி பண்ணாங்க. காசு இல்லனா நம்பிக்கை குறைஞ்சுடும். பாதுகாப்பு இல்லாத மாதிரி ஃபீல் பண்ணுவோம். இது நமக்கு ஒர்க் ஆகாதுனு தோணிடும். நான் அதுவும் சில விஷயம் நம்புறேன்.
ரொம்ப நன்றி காயத்ரி:
பணம் கொடுக்குற தேவியும் ஒரு இதுதானே சார். அந்த நேரத்துல லவ் பண்ணப்ப அவங்கதான் வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. அவங்க எந்த நேரத்துல என் வாழ்க்கையில வந்தாங்களோ என் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனாங்க.
உண்மையில சொல்றேன் அவங்க வர்றதுக்கு ஒரு மாசம் லேட்டாகியிருந்தா நான் சினிமாவை விட்டு போயிருப்பேன். என் வாழ்க்கையில அவங்க வந்தாங்க. அவங்கதான் என்னை இழுத்து வந்துடலாம்.. வந்துடலாம்.. பாத்துக்கலாம்னு வந்தபோது அவங்க பாத்துக்கிட்டாங்க. என் மனைவி பேரு காயத்ரி. காயத்ரி ரொம்ப நன்றி."
இவ்வாறு அவர் பேசினார்.
பளாக்பஸ்டர் ஹிட்
நடிகர் தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்தை லட்சுமண் குமார் - ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தயாரித்திருப்பார்கள். சான் ரோல்டன் இசையமைத்த இந்த படம் 42 கோடி வசூலை குவித்தது. இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கடந்தாண்டு ரிலீசான லப்பர் பந்து 2024ம் ஆண்டு வெளியான படங்களிலே மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. கிராமத்து பின்னணியில் தினேஷ் நடித்த கெத்து கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.





















