மேலும் அறிய

“லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” LSS பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. 

 

வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்...

இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது

எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.

ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது.., 
இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த பாடலுக்கு பல பேரை அணுகி, இறுதியில் இயக்குநர் சரண் சாரை அணுகினோம். அவர் படத்தில் எப்போதும்  எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிடும். அவர் அழகான பாடலை எழுதித்தந்தார். பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி. 

இயக்குநர் சரண் பேசியதாவது

இந்த படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராக (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான  வட்டாரம் படத்தில்  இடம்பெற்ற “யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே  பாடல்களை எழுதுவார்.

இந்த படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு (Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் “இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்” என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.

இந்த பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த பாடலை உருவாக்கினேன்.

இந்த பாடல் ஒரு ப்ரமோஷனல் சாங்காக இருந்தாலும், அதை மனதார ஏற்றுக் கொண்டு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, அகத் மகேந்திரன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி.

புதிய நாயகி சிம்ரன் அத்வானி படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது

எனக்கு நெருக்கமான நண்பரும், குடும்ப உறுப்பினருக்குச் சமமானவருமான பாலகோபி  அவர்களின் மகனின் அறிமுக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. பல தயாரிப்பாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து, பல வெற்றிப் படங்களுக்குப் பின்னால் உழைத்தவர் அவர். அந்த வெற்றிகளில் ஒரு சிறிய பங்கு இருந்தாலும், அவருடன் இணைந்து பயணித்த அனுபவம் எனக்குப் பெருமை. அந்த வெற்றிகளுக்காக அவருடைய மகனுக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காத நிலையில், இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு குறிப்பாக சரண்  அவர்கள் இப்படத்திற்குப் பாடல் எழுதியிருப்பது பெரும் மகிழ்ச்சி.  அவருக்கு நான் ரசிகன், அவர் போன்ற ஆளுமை புதுமுகங்கள் பட்டதிற்குப் பாடல் எழுதுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் கொண்ட  சின்ன  பட்ஜெட் படங்கள் தான் ஜெயிக்கிறது,  அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள். 

மேனேஜர் யூனியன் பிரஸிடெண்ட்  ராஜேந்திரன் பேசியதாவது

இந்த படத்தில் ஆதவ் கிருஷ்ணாவை பார்க்கும் போது, இது ஒரு புதுமுகம் போலவே இல்லை. நன்றாக நடித்துள்ளார். ஏற்கனவே பத்து படங்கள் செய்து அனுபவம் பெற்ற ஒரு இயக்குநர் எடுத்த படத்தின் தரத்தில் இந்த டீசர் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாகவே இந்த படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய முயற்சி. குறிப்பாக, லவ்வர்ஸ் டேயை முன்னிட்டு சரியான நேரத்தில் ஒரு அழகான காதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு டீசரும் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. டீசரை பார்த்தவுடன் படம் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த முயற்சிக்குப் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். 

நடிகர் இளவரசு பேசியதாவது

இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மரியாதைக்குரிய இயக்குநர்  மகாலட்சுமி முருகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். “மகாலட்சுமி” என்ற பெயர் எனக்குத் தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. அந்த பெயருடன் நீங்கள் ஒரு இயக்குநராக உயர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி சிம்ரன் அத்வானி அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவரின் நடிப்பு இயல்பாகவும் அழகாகவும் உள்ளது. 

நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மார்க்கெட் இருக்கும். ஆனால் மேனேஜர் என்ற பொறுப்பு மிகப் பெரியது. ஒரு படத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஒட்டுமொத்த பொறுப்பையும் சுமந்து, பிரச்சினைகளை கையாள்ந்து, தயாரிப்பாளருக்கும் படக்குழுவிற்கும் துணை நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த பணியை மிக நேர்மையாகவும், பாசிட்டிவாகவும் செய்து வருபவர் பாலகோபி. அவருடைய மகன் இன்று இந்த திரைப்படத்தில் அறிமுகமாகிறார். நீ நல்ல பையன். நல்ல வளர்ப்பு. ஆனால் உன் அப்பா யார் என்பதைக் காட்டிலும், பாலகோபி என்ற மனிதர் யார் என்பதை நீ புரிந்து கொண்டு, அந்த பண்புகளை உன் வாழ்க்கையில் எடுத்துச் செல்ல வேண்டும். உன் அப்பாவின் உழைப்பும், நற்பெயரும் இந்த திரைப்படத்தின் மூலம் உனக்கு நல்ல அடையாளத்தைத் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். நன்றி. 

நடிகர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் பேசியதாவது

இந்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பேசுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பதால் கூடுதல் சந்தோஷம். தம்பி ஆதவ் கிருஷ்ணா இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் அவருடைய உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி. அந்த உழைப்புக்கு உரிய வெற்றி இந்த படத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, இயக்குநர், நடிகர்கள் என அனைவரின் உழைப்பும் நல்ல பலனைத் தர வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்து ஆதரித்து, வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இந்த விழா இசை வெளியீட்டு நிகழ்வாக இருந்தாலும், இதில் பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த வணக்கங்கள். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்–நடிகைகள், நடன இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்களுக்கும் என் முதல் நன்றி.

தலைப்பு செய்திகள்

Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஒர்க் அவுட்டான ரோகிணியின் ஆக்டிங்.. அசிங்கப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று
Sharanya Turadi : ‘புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு Make-Up வீடியோ போடணுமா?’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா துராடி ஆவேச பதிவு.!
'Make-Up வீடியோ போடனுமா’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சரண்யா ஆவேசம்..!
"நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வார்த்தையை மாற்றிச் சொல்கிறேன்" - முதல்வர் விஜய்யின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டத்திற்கு அஜித் வாழ்த்து

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Ather Konarc Vs Bajaj Chetak: ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஏதர் கோனார்க்கா.? பஜாஜ் சேதக்கா.? சிட்டி பயணத்துக்கு எந்த EV ஸ்கூட்டர் பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Netanyahu Warns Iran: “எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
“எங்களோட மோத ட்ரை பண்ணாதீங்க, அப்படி பண்ணா...“ - ஈரானை மிரட்டும் நெதன்யாகு; என்ன சொன்னார்.?
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Embed widget