மேலும் அறிய

"நான் நினைச்ச மாதிரி இன்னும் படம் எடுக்கல" ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த லோகேஷ் கனகராஜ்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை தான் எடுக்க நினைத்த ஆக்ஷன் படத்தை எடுக்க இயலவில்லை என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உலா வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆக்‌ஷன் படம் எடுக்கவில்லை:

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் உங்கள் படங்களில் வன்முறையை சரியான அளவில்தான் பயன்படுத்துகிறேன் என்று உணர்கிறீர்களா? என்று கேட்கப்படடது. இந்த கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “ உங்கள் கேள்விக்கு நியாயமாக பதில் அளிக்க வேண்டும் என்றால் நான் எடுக்க வேண்டும் என்று நினைத்த ஆக்‌ஷன் படத்தை இதுவரை எடுக்கவில்லை. முதல்முறை கைதிக்கு சென்சார் போய் வந்தது முதலே எனக்கு இந்த சிக்கல் இருக்கிறது. அடுத்து, எது எதற்கு? எங்கெல்லாம் பிரச்சினை வரப்போகிறது என்று இருந்தது.

படம் எடுக்க முடியாது:

அப்படியே ஒரு ஆக்ஷன் படத்தை ஸ்டார் ஹீரோக்களை வைத்து எடுக்க முடியாது. குடும்பங்களும் வரப்போகிறார்கள். அனைவரும் பார்க்கப்போகிறார்கள். நான் என்னுடைய ஸ்டண்ட் மாஸ்டரிம் முன்னாடியே ரோப் செட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லிவிடுவேன். இரண்டாவது எந்த கதாபாத்திரம் எப்படி சண்டை செய்யப்போகிறது என்பதையும் செட் செய்யப்போகிறோம். கில் பில் படத்தை எடுத்து நமது ஊரில் ரிலீஸ் செய்ய முடியாது. கில் பில் படத்தை நமது ஊருக்கு ஏற்றாற்போல எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஓடிடியில் கூட ரிலீஸ் செய்ய முடியாது. அது அத்தனை விருதுகளை வென்றுள்ளது. அதை நமது ஊரில் எடுக்கவும் முடியாது. ரிலீஸ் செய்யவும் முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

கூலி:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உலா வரும் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலமாக முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், கைதி படத்தை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி உச்ச இயக்குனராக புகழ்பெற்றார். பின்னர், லியோ படத்தை இயக்கினார். தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனராஜே தான் எடுக்க நினைத்த ஆக்‌ஷன் படத்தை இதுவரை எடுக்க முடியவில்லை என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?

Embed widget