மேலும் அறிய

Killer Of The Flower Moon : லியோனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் படத்தை தவறவிடாதீங்க.. ‘கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்’ ரிலீஸூக்கு ரெடி!

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கி, லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும் கில்லஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லியோனார்டோ டிகாப்ரியோ  ( Leonardo dicaprio )


Killer Of The Flower Moon : லியோனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் படத்தை தவறவிடாதீங்க.. ‘கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்’ ரிலீஸூக்கு ரெடி!

 உலக திரையுலகம் போற்றும் நடிகர்களில் ஒருவர் லியோனார்டோ டிகாப்ரியோ. டைட்டானிக் படத்தில் ஜாக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்த டிகாப்ரியோ ஒவ்வொரு படத்திற்கும் தனது நடிப்பின் முதிர்ச்சியை பிரதிபலித்தபடி இருக்கிறார்.

Inception, Revenant, Shutter Island, Once upon a time in Hollywood உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இதுவரை 8 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டு Revenant படத்தில் தனது நடிப்பிற்காக ஆஸ்கர் வென்றார்.

தற்போது ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் அவர்  நடித்திருக்கும் படம் Killers Of The Flower Moon. முன்னதாக இந்தப் படத்தின்  இரண்டு டிரெய்லர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய டிரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது பாராமெளண்ட் நிறுவனம். வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் (Killers Of The Flower Moon)

 எண்ணெய் வளத்திற்காக ஓசாஜே என்கிற பழங்குடி மக்கள் மர்மமான முறையில் அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டப் படம் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’.

ஒசாஜே மக்களிடம் இருந்து அவர்களின் நிலத்தை பறிக்க நியமிக்கப்படுகிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. அந்த இனத்தைச் சேர்ந்த பெண் மீது காதல் கொண்டு அவரை திருமணமும் செய்துகொள்கிறார். தனது மனைவியின் மீதான காதல் மற்றும் தனது சொந்த நாட்டினத்தவர்களுக்கு தான் செய்ய  வேண்டிய கடமை என இரண்டிற்கு நடுவில் சிக்கித் தவித்து நிற்கிறார் கதாநாயகன். இதில் அவர் யார் பக்கம் நிற்கப் போகிறார் என்பதே கதை.

மார்ட்டின் ஸ்கார்செஸி


Killer Of The Flower Moon : லியோனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் படத்தை தவறவிடாதீங்க.. ‘கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்’ ரிலீஸூக்கு ரெடி!

ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மார்ட்டின் ஸ்கார்செஸி. ஹாலிவுட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் இயக்குனர்கள் மார்ட்டினை தங்களது குருவாக கருதி வருகிறார்கள். தமிழில் இன்று பல திரைப்படங்கள் மார்ட்டின் ஸ்கார்செஸியின் ஒரு காட்சியாவது நினைவுபடுத்தாமல் இருக்காது.

ஹாலிவுட்டில் கிட்டதட்ட 25  திரைப்படங்கள், 16 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் மார்ட்டின். தற்போது Killers of the flower moon என்கிற படத்தை இயக்கியுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நிரோ ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த மே மாதம் நடந்து முடிந்த சர்வதேச கான் திரைப்பட விழாவில் இந்தப் படத்தினைப் பார்த்த பார்வையாளர்கள் படத்தை பாராட்டும் விதத்தில் சுமார் 10 நிமிடம் தொடர்ந்து கைதட்டி மார்டின் ஸ்கார்செஸியைப் பெருமைப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget