மேலும் அறிய

Sanjay Dutt Workout Video: யாரு சாமீ நீங்க....மரம் வெட்டும் உடற்பயிற்சி....63 வயதில் மாஸ் காட்டும் நடிகர் சஞ்சய் தத்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எத்தனையோ வகையான உடற்பயிற்சி முறைகள் இருக்கின்றன. ஆனால் இப்படி ஒரு கரடுமுரடான உடற்பயிற்சியை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இதைச் செய்தது வேறு யாரும் இல்லை, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான்!

பாலிவுட்டில் முன்னா பாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகர் சஞ்சய் தத். நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த இவர், அண்மைக்காலங்களில் முக்கியமான திரைப்படங்களில் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார். கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்பதத்தில் இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஆதீராவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். உடம்பெல்லாம் பட்டை குத்திக்கொண்டு வாள் ஏந்தி ஒரு சாமுராய் போல் அவர் தோற்றமளித்து ரசிகர்களை மிரள வைத்தது.

லியோ

அந்த வரிசையில் தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்துள்ளார் சஞ்சய் தத். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்பது பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. முதலில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. பின் நடிகர் விஜய்க்கு தந்தையாக அவர் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானது.  ஆனால் படத்தில் இவரது கதாபாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

 

உடற்பயிற்சி செய்யும் வீடியோ

இந்நிலையில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சஞ்சய் தத் லைக்ஸ் அள்ளி வருகிறார். இந்த வீடியோவில்  கோடாரி ஒன்றை வைத்துக்கொண்டு மரக்கட்டைகளை உடைத்து பிளந்து கொண்டிருக்கிறார் சஞ்சய தத்.

அத்துடன், “ மீண்டும் அடிப்படை பயிற்சிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளேன். மரம் வெட்டுவது மிகச் சிறந்த உடற்பயிற்சி முறை. இந்த வகை பயிற்சி உடலின் மேற்பாகங்களை உறுதியாக்க உதவும் . நீங்களும் இதை செய்துபாருங்கள் “ என தனது ரசிகர்களுக்கும் அறிவுரையும் வழங்கியுள்ளார் சஞ்சய் தத். இப்படி முரட்டுத்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகர் சஞ்சய் தத்துக்கு தற்போது 63 வயதாகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்!

லியோ

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, பிரியா ஆனந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
S2 Theyagaraja: திருவான்மியூர் S2 தியாகராஜா சினிமாஸ் இடிப்பு.. அடுத்து வரப்போவது என்ன? - வெளியான தகவல்!
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ
இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Off Road SUV: ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
ஆஃப் ரோட் கிங், 4 ஸ்டார் ரேட்டிங், கெத்தான ரக்கட் லுக் - GenZ-க்கு ரூ.7,900 போதும், முழு EMI விவரங்கள்
Oben Rorr EVO: ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஒரே சார்ஜில் 180 கிமீ மைலேஜ் பாஸ்.! Oben Rorr EVO-க்கு குவிந்த புக்கிங்; டெலிவரி தொடக்கம்; பைக்கில் என்ன ஸ்பெஷல்.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget