மேலும் அறிய

T Rajendar: சிலம்பரசனுக்காக என் வாழ்க்கையையே விட்டுக் கொடுப்பேன்.. உருகிய டி.ஆர்!

நான் இயக்கிய உயிருள்ள வரை உஷா படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 6ம் தேதி வெளியிட முடிவெடுத்தேன். ஆனால் சிலம்பாட்டம் படம் ரிலீஸாவதால் அதனை ஒத்திவைத்துள்ளேன் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

என் மகன் சிலம்பரசனுக்காக என் வாழ்க்கயையே விட்டுக் கொடுப்பேன் என தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் டிஆர் நடிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் “சிலம்பாட்டம்”. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் பிப்ரவரி 6ம் தேதி ரீ-ரிலீசாக உள்ளது. இதனை முன்னிட்டு அப்படத்தின் நிகழ்ச்சி இன்று வடபழனி பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

இதில் பேசிய பன்முக கலைஞர் டி.ராஜேந்தர், “சிலம்பரசனின் சிலம்பாட்டம் படம் ரீ-ரிலீஸாக உள்ளது. அதற்காக முழு மூச்சாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இந்த ரீ-ரிலீஸ் காலக்கட்டம் மாறுபட்ட காலமாக உள்ளது. இன்றைக்கு இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் படங்களின் தொழில்நுட்பங்கள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது. நான் எல்லா படத்தையும் ரசிப்பேன். இந்த சிலம்பாட்டம் படம் நான் தியேட்டரில் பார்த்தேன். டிஜிட்டலில் பார்க்க சிறப்பாக உள்ளது. தமிழ் என்றால் பாடலில் உள்ள பிரேம்கள் தொடங்கி அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கிறது.  

இந்த படத்தில் இயக்குநர் சரவணன், சிலம்பரசன், சந்தானம், சினேகா, சானா கான் என அனைவரின் பெயர் ஆங்கிலத்தில் முதல் எழுத்து "S"  என ஆரம்பிக்கிறது. சிம்பு, சினேகா காம்போ எவர்க்ரீன் ஜோடி என சொல்லலாம். என்னுடைய மகனின் வாழ்க்கையில் என்னையே கீழே தள்ளக்கூடிய அளவுக்கு யோசிக்க வைத்த படம் “விண்ணைத்தாண்டி வருவாயா”. ஆக்‌ஷன் படமும் ரீ-ரிலீஸில் நிற்கும் என்பதற்கு உதாரணமாக அஜித் நடித்த மங்காத்தா படம் அமைந்துள்ளது. 

அன்னைக்கு சாதனை படைத்த படங்களைப் பார்த்து இன்றைக்கு படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. டி.ஆரை பார்த்தால் மைக்குக்கே மயக்கம் வரும். சில ட்யூப் சேனலில் டி.ராஜேந்தரால் பேச முடியாது. அவருக்கு முடி கிடையாது என கிளப்பி விடுகிறார்கள். அதெல்லாம் சும்மா, நான் நன்றாக தான் இருக்கிறேன். 

நான் இயக்கிய உயிருள்ள வரை உஷா படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 6ம் தேதி வெளியாக முடிவெடுத்தேன். ஆனால் 6ம் தேதியை விட்டுக் கொடுத்தேன். அந்த 6ம் தேதி சிலம்பாட்டம் ரிலீசாகிறது. என் மகன் சிலம்பரசனுக்காக என்னையே கொடுப்பேன். என் வாழ்க்கையே கொடுப்பேன். 5 வருடம் இல்லை, 50 வருடம் கழித்து வந்தாலும் நான் சிம்புக்கு ரசிகராக இருப்பேன் என இருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். 

சிலம்பாட்டம் படம் என் மகன் சிம்புவின் ரீ-ரிலீஸில் தனியிடம் பிடிக்க வேண்டும் என ஒரு தந்தையாக ஆர்வம் உள்ளது. என் மகனுக்காக நான் படத்தை தள்ளிப் போடுகிறேன். இதே மாதம் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியானால் கூட உயிருள்ள வரை உஷா படம் ரீ-ரிலீஸை தள்ளிப் போடுவேன்”  என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget