800-க்கும் அதிகமான திரையரங்குகள்.. மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட தி லெஜண்ட்!
தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜிஎன் அன்புச்செழியன் வெளியிடுகிறார்
லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜிஎன் அன்புச்செழியன் வெளியிடுகிறார்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஒன்றாக திகழ்வது சரவணா ஸ்டோர்ஸ். லெஜண்ட் சரவணா ஸ்டோர்சின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் கடந்த சில ஆண்டுகளாக தனது கடைக்கான விளம்பரங்களுக்கு தானே நடித்தார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
பின்னர், நடிப்பின் மேல் ஆசை கொண்ட அவர் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Save the date July 28 #Legend pic.twitter.com/1yfwxcf0KK
— Legend_saravanan (@legend_saravan) July 6, 2022
இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜிஎன் அன்புச்செழியன் வெளியிடுகிறார்
"என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டியுள்ள அன்புசெழியன், நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.