மேலும் அறிய

Legend OTT Release: ஓடிடியில் வெளியானது ‘தி லெஜெண்ட்’ திரைப்படம்.. மக்களின் மனதை மீண்டும் கவர்ந்து அசத்தல்..!

தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ’தி லெஜெண்ட்’ மீண்டும் ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று குடும்ப உறுப்பினர்களின் நெஞ்சங்களை ஆக்கிரமிக்க தொடங்கியது. 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும். 

சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் அருள் சரவணன். தன்னுடைய சரவணா ஸ்டோர்ஸ் தி லெஜெண்ட் கடை விளம்பரத்திற்கு எந்தவொரு மாடல் மற்றும் நடிகர்களை எதிர்பார்க்காமல் தானே விளம்பர நிறுவனங்களில் நடித்து பிரபலமடைந்தார். திரையுலக ரசிகர்களால் செல்லமாக ‘தி லெஜன்ட்’ என்று அழைக்கப்பட்டார். அதற்கு காரணம், இவர் தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் வைத்திருப்பதால் மட்டுமல்ல…ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னனி கதாநாயகர்களுக்கு போட்டியாக, தன் படத்தையும் பான் இந்தியா அளவில் வெளியிட்டு அசத்தினார்.

 'தி லெஜெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என 5  மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.  

தி லெஜெண்ட் : 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான ’தி லெஜெண்ட்’ திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, ராய் லக்ஷ்மி உள்பட  மூன்று கதாநாயகிகள் உள்ளனர்.மேலும், நடிகர் சுமன், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், நடிகர் நாசர், மயில் சாமி, ரோபோ சங்கர், யோகி பாபு என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. விசில் படத்தை இயக்கியஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 

ஹாரிஸ் ஜெயராஸ் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்திருந்தது.படம் முழுக்க ரொமான்ஸ், செண்டிமெண்ட், சண்டை காட்சிகள் என கலவையாக இருக்க, இந்த படத்தில் நடித்திருந்த லெஜெண்ட் சரவணாவின் முயற்சிகளுக்கு சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். 

இந்தநிலையில், தி லெஜெண்ட் திரைப்படம் திரையரங்குகளை தொடர்ந்து எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு இந்த படம் வெளியாகும் ஓடிடி தளம் மற்றும் நாள் குறித்து அப்டேட் தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, தி லெஜெண்ட் திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியானது. முன்னதாக, ஓடிடி தளத்தில் படம் வெளியாவது குறித்து லெஜெண்ட் சரவணா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 

தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ’தி லெஜெண்ட்’ மீண்டும் ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று குடும்ப உறுப்பினர்களின் நெஞ்சங்களை ஆக்கிரமிக்க தொடங்கியது. 

தலைப்பு செய்திகள்

ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
ஃப்ரேம பாருங்க ஜி...ஜெயிலர் 2 One Name பாடல் முழு லிரிக்ஸ் இதோ
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்... ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Jailer 2 Songs: ”அலப்பற கெளப்பறோம்”..... ஜெயிலர் 2 பாடல்கள் நாளை ரிலீஸ்
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்

Embed widget