![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘பிரேக் அப்... எனக்கு பிரேக் அப்...’ லலித் மோடிக்கும் சுஷ்மிதாவிற்கும் ஏற்பட்டதா பிரேக் ?
லலித் மோடி - சுஷ்மிதா உறவு பிரிந்ததாக சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.
![‘பிரேக் அப்... எனக்கு பிரேக் அப்...’ லலித் மோடிக்கும் சுஷ்மிதாவிற்கும் ஏற்பட்டதா பிரேக் ? Lalit Modi Sushmita Sen Relationship comes to an end breakup rumour goes viral ‘பிரேக் அப்... எனக்கு பிரேக் அப்...’ லலித் மோடிக்கும் சுஷ்மிதாவிற்கும் ஏற்பட்டதா பிரேக் ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/6a91ba59c175f0d9eb2582355f8cc6201662448853894102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக நாட்டின் சென்சேஷனாக இருந்து வந்தனர். இதற்கு காரணம் இவர்களுக்கு இடையே மலர்ந்த காதல்தான். தற்போது இருவரும் பிரிந்து விட்டனர் என்ற தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.தொழிலதிபர் லலித் மோடி அவரது இன்ஸ்டாவின் டி.பியை மாற்றியுள்ளார். முன்னதாக சுஷ்மிதாவின் போட்டோவை தனது டிஸ்ப்ளே புகைப்படமாக வைத்திருந்தார். அதனால் இருவரும் பிரிந்து விட்டனர் என்று பேசப்படுகிறது.
இருவரும் அவர்களது காதல் விவகாரத்தை வெளி உலகத்திற்கு சொன்ன போது அனைவரும் ஷாக் ஆகினர். இதில் லலித் மோடி உலக அழகி சுஷ்மிதாவை, தனது சரி பாதி என்றும் இருவரும் காதலில் உள்ளதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ஆனால், கடவுளின் அருளால் நாங்கள் இருவரும் ஒன்று இணையலாம் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
பிறகு சுஷ்மிதாவின் புகைப்படத்தை டிஸ்ப்லே போட்டோவாக வைத்து, பயோவில், “இறுதியில் எனது புது வாழ்கையை எனது க்ரைம் பார்ட்னருடன் துவங்க உள்ளேன். என் காதலே.. சுஷ்மிதா” என்று குறிப்பிட்டுருந்தார். இப்போது இது அனைத்தையும் இவர் நீக்கியுள்ளார். அதனால் நெட்டிசன்ஸ், சமூக வலைதளங்களில் அவர்களை ட்ரால் செய்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
லலித் மோடி, மினல் சக்ராணி என்பவரை 1991- ல் மணந்தார். இருவருக்கும் ருசிர் என்ற மகன், அலியா என்ற மகள் மற்றும் கரிமா ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர். பின்னர் அவரது மனைவி மினல் சக்ராணி 108-ல் புற்றுநோயால் காலமானார்.
View this post on Instagram
மறுபுறம், சுஷ்மிதா ரோமன் சால் என்பவருடன் 2018-லிருந்து உறவில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு இவர் இருவரும் பிரிந்தனர்.நடிகை சுஷ்மிதா ரெனீ, அலிஷா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)