மேலும் அறிய

Nayanthara : அடேங்கப்பா! ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; தனி விமானம்... நயன்தாராவின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு!

Nayanthara : இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் பற்றி தெரிந்து கொள்ளலாமா?


தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள். இந்த சிறப்பான நாள் அன்று  நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என தோராயமாக ஒரு  தகவலை ரசிகர்களுக்கு சொல்லி அசர வைக்கலாமா !

 

Nayanthara : அடேங்கப்பா! ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; தனி விமானம்... நயன்தாராவின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு!


திரைத்துறை அறிமுகம் :


கேரளத்து பெண்குட்டி டயானா மரியம் குரியன் 1984ம் ஆண்டு பிறந்தார். கல்லூரி டீனேஜ் கேர்ளாக இருக்கும் போதில் இருந்தே மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் பார்ட் டைமாக விளம்பர துறையிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். அதன் மூலம் தான் 2005ம் ஆண்டு ஐயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தில் பப்ளி கேர்ளாக ஹோம்லியான கேரக்டரில் வந்து 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என சொல்லி அனைவரையும் கவர்ந்துவிட்டார். அடுத்த படமே சூப்பர் ஸ்டார் ஜோடி. இப்படி ஒரு சில அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும். திரைத்துறையில் நுழைந்த உடனே டாப் நடிகர்களின் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

வுமன் சென்ரிக் படங்கள் :

ஒரு சில படங்களில் நடித்த உடனே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நயன்தாராவுக்கு சிம்புவுடன் காதல், பிரபு தேவாவுடன் காதல் என பல செய்திகள் பரவி வந்தன. காதல் பிரேக் அப் ஆனதால் சில காலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த நயன்தாரா திடீரென ஒரு புயலாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதுவும் பெண்களை மையப்படுத்தும் படங்களாக தேர்வு செய்து தன்னுடைய விஸ்வரூப வெற்றியை காட்டினார்.

Nayanthara : அடேங்கப்பா! ஆடம்பர பங்களா; சொகுசு கார்கள்; தனி விமானம்... நயன்தாராவின் வியக்கவைக்கும் சொத்து மதிப்பு!

திருமணம் - குழந்தைகள் :

மீண்டும் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு  பெற்றோர்கள் ஆனார்கள். சோசியல் மீடியாவில் என்றுமே ட்ரெண்டிங் கப்பிளாக வலம் வருகிறார்கள் நயன்தாரா  - விக்னேஷ் சிவன் தம்பதி.

தென்னிந்திய சினிமாவை கலக்கிய நயன்தாரா 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகி அங்கும் தனது ஆதிக்கத்தை ஸ்ட்ராங்காக நிலை நிறுத்திவிட்டார். நாளுக்கு நாள் நயன்தாராவின் வளர்ச்சியை கண்முன்னே பார்த்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

கோடிகளில் சம்பளம் :

நயன்தாரா நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி  தனிஷ்க், கே பியூட்டி போல பல பிரபலமான பிராண்டுகளின் பிராண்ட் அம்பாஸடராக இருந்து வருகிறார். அதற்கு பல கோடிகளை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

 

ஆடம்பர பங்களாக்கள் :

சென்னையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இரு வீடுகளையும், கேரளாவில் தனது பெற்றோர் வசிக்கும் ஒரு வீடும் உள்ளது. அது தவிர ஹைதராபாத்தில் பல பிரபலங்கள் வசிக்கும்  பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சுமார் 15 கோடி மதிப்பிலான இரண்டு ஆடம்பர பங்களாக்களையும் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மும்பையில் ஒரு பீச் வியூ அபார்ட்மெண்ட் ஒன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.

 

சொகுசு கார்கள் :

2 பிஎம்டபிள்யூ கார்கள், பென்ஸ், மெர்சிடிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, போர்டு போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார் நயன்தாரா. மேலும் தன்னுடைய தனிப்பட்ட பயணத்திற்காகவும் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அடிக்கடி கணவருடன் ஜெட் விமானத்தில் பறப்பதை அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் காணலாம்.

எக்கச்சக்கமான சைட் பிசினஸ் :

நடிப்பு துறையில் இருந்து வந்தாலும் சொந்தமாக பல பிசினஸ்களையும் நடத்தி வருகிறார். மேலும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் பேனரின் கீழ் பல படங்களை தயாரித்தும் வருகிறார் நயன்தாரா. 2018ம் ஆண்டுக்கான டாப் 100 ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்களின்  பட்டியலில் நயன்தாராவின் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடிக்கும் மேல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
வடக்கில் எகிறப்போகும் வசூல்...ஜெயிலர் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
CJP போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு சிக்கல்.. இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget