மேலும் அறிய

நயன்தாரா கூட்டணியில் பிக்பாஸ் கவின்? பிளான் செய்த படக்குழு.. ஓகே செய்யப்பட்டதா இந்த ஜோடி?

கவின் நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது

சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது வெள்ளித்திறையில் கால் பதித்துள்ளார். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் வசூl ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் கவினுக்கு நல்ல மார்கெட்டையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நிலையில் கவின் தனது அடுத்த படத்துக்கான கதை கேட்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். குறிப்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பு நிறுவனமான ’ரவுடி பிக்சர்ஸ்’ வெளியிடுவார்கள் என தெரிகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாராவுக்கு சொந்தமான  ’ரவுடி பிக்சர்ஸ்’  நிறுவனத்தின் தயாரிப்பில் இறுதியாக நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஒடிடியில் அதிக லாபத்துக்கே விற்றுவிட்டனர். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவனே இயக்கி 7 Screen Studios உடன் இணைந்து தயாரிக்கிறார் . இது தவிர கூழாங்கல் என்னும் படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிரது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. பல தேசிய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)


மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் “two two two " பாடல் சமீபத்தில் வெளியாகி , ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பாடலுக்கு அனிருத் இசையமைத்து, பாடி நடித்திருந்தார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிரபல  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

மேலும் 8 தேசிய விருதுகளை பெற்ற ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் மாபெரும் பலமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன், த்ரிஷா மற்றும் நயன்தாராவை கொண்டு ஒரு முக்கோண காதல் கதையை உருவாக்க முடிவு செய்தார். ஆனால் இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விஜய்சேதுபதியை ஹீரோவாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். சுமார் 4 ஆண்டுகள் கழித்து படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget