மேலும் அறிய

Oyyaram Lyric Video : மீண்டும் சந்தோஷ் நாராயணன் ஆதிக்கம்.. வெளியான ஜிகர்தண்டா படத்தின் ஒய்யாரம் லிரிக் வீடியோ

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ள ஒய்யாரம் பாடலில் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா , நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. மொத்தம் 3 நாட்களில்..

குவியும் பாராட்டும் வசூலும்

முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே ரூ 2.41 கோடி வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இரண்டாவது நாளில் 4.86 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளாக 7.2 கோடி என மொத்தம் மூன்று நாட்களில் ரூ 14.47 கோடிகளை வசூல் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 

பாராட்டுக்களைப் பெறும் நடிகர்கள்

ஜிகர்தண்டா படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும் அவர் இதுவரை  இயக்கிய படங்களில் சிறந்த படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அடுத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் மூலமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர் நடித்திருக்கும் அல்லியஸ் சீசர் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார். எப்போதும்போல் ரசிகர்களால் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

சந்தோஷ் நாராயணனின் இசை

இவர்களைத் தவிர்த்து அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். தன்னுடைய தனித்துவமான இசைக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த சந்தோஷ் நாராயணன், இடைப்பட்ட சில காலம் ஒரு பெரிய இடைவெளி எடுத்துக் கொண்டார் . தற்போது அவர் இசையமைத்து வரும் பான் இந்திய திரைப்படமான கல்கி 2898 படத்திற்காக தான் இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் அவர் இசையமைத்தப் பாடல்கள் மற்றும் பின்னணி ஆகிய இரண்டும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

தன்னுடைய வழக்கமான வெஸ்டர்ன் பாணி மற்றும் ஃபோல்க் ஃபியூஷன் உடன் சேர்ந்து நாட்டுப்புற இசையையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி பல்வேறு ஜானர் இசைகளைக் கொண்ட ஆல்பமாக கொடுத்திருக்கிறார். 

ஒய்யாரம் லிரிக்கல் வீடியோ

முன்னதாக மாமதுர பாடல் வெளியானதைத்  தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒய்யாரம் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. பாடலாசிரியல் விவேக் இந்தப் பாடலை எழுதியுள்ள  நிலையில் மீனாட்சி இளையராஜா, மீனாட்சி சந்தோஷ், ஆதித்ய ரவீந்திரன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டவர்கள் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget