மேலும் அறிய

காந்தாரா சாப்டர் 1: முதல் நாளில் எத்தனை கோடி வசூல்? -ரிஷப் ஷெட்டியின் மாஸ் என்ட்ரி

காந்தாரா சாப்டர்- 1 இந்தி வெர்ஷன் ரூ.19.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.18 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.12.5 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.5.25 கோடி, மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்து இருக்கிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 முதல் நாள் கலெக்‌ஷன் ரூ.60 கோடி வசூலித்து பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தை விட பெரிய அளவில் இந்த படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
 
ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அனைவரையும் மிரள வைத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு, 'காந்தாரா' படத்தின் அடுத்த பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் வெறும் ரூ.15-20 கோடியில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது ரூ. 400 கோடி வரை வசூலித்தது. இப்போது, 2-ம் பாகத்திற்கு ரூ. 125 கோடி வரை செலவிட்டதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக பேச்சு உள்ளது.

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படமான 'காந்தாரா சாப்டர் 1'  ரிலீசை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர். காரணம் 2022-ல் வெளியான 'காந்தாரா' திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரிஷப் ஷெட்டியை அண்ணாந்து பார்க்க வைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் முன்கதையாக காந்தாரா சாப்டர் 1 வந்துள்ளது. படம் தொடங்கிய காலத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. படப்பிடிப்பு  மேலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. காந்தாரா சாப்டர் 1 படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்தியாவில் மொத்தம் 6500 திரைகளில் சுமார் 12,511க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்காவில் மட்டும் இப்படம் சுமார் 4.20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 30 நாடுகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் முதல் நாள் வசூல் சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிளாக்பஸ்டர் தொடக்கத்தைக் கண்ட இப்படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் இதுவரை விற்பனையாகியுள்ளன, வியாழக்கிழமை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 60,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளே இந்தியாவில் மட்டும் ரூ.60 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி அதிகபட்சமாக இப்படத்தின் இந்தி வெர்ஷன் ரூ.19.5 கோடியும், கன்னட வெர்ஷன் ரூ.18 கோடியும், தெலுங்கு வெர்ஷன் ரூ.12.5 கோடியும், தமிழ் வெர்ஷன் ரூ.5.25 கோடியும், மலையாள வெர்ஷன் ரூ.4.75 கோடியும் வசூலித்து இருக்கிறது. இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

காந்தாரா படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது முதல்நாளில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகம் தற்போது அதைவிட 10 மடங்கு கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இப்படம் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு 1000 கோடி வசூல் செய்த முதல் படமாக காந்தாரா சாப்டர் 1 அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் கன்னட திரையுலகில் 1000 கோடி வசூல் அள்ளிய ஒரே படம் கேஜிஎஃப் 2 என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Embed widget