மேலும் அறிய

Watch video: இவ்வளவு ஃபிட்டான மனிதருக்கு மரணமா...? வைரலாகும் புனீத் ராஜ்குமாரின் ஓர்க் அவுட் வீடியோ..!

இவ்வளவு ஃபிட்டாக இருக்கும் மனிதருக்கா, சீக்கிரம் மரணம் வந்து சேர்ந்தது என்று வீடியோ கண்ட ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த கன்னட திரையுலகுக்கு மட்டுமல்லாமல் இந்தியா திரையுலகுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த அதிர்ச்சி காரணம் 46 வயதில் வந்த இறப்புதான். அதுவும் உடலை ஃபிட்டாகவும், எப்போதும் ஆக்டிவாகவும் இருக்கும் ஒரு மனிதர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது வேதனையின் உச்சக்கட்டம். தனது ரசிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் புனீத் ராஜ்குமார், அவர்களும் தங்களின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவார். அதற்காக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார் புனீத். எந்த வயதிலும் எது வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு வயது ஒரு தடையில்லை இல்லை என்று தனது திரைப்படம் மற்றும் நிஜவாழ்க்கையிலும்  நிரூபித்து காட்டியவர். புனீத்தின் மறைவுக்கு அவரது பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், அவரின் ஓர்க் அவுட் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இவ்வளவு ஃபிட்டாக இருக்கும் மனிதருக்கா, சீக்கிரம் மரணம் வந்து சேர்ந்தது என்று வீடியோ கண்ட ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Puneeth Rajkumar (@puneethrajkumar.official)

கன்னடத் திரையுலகின் மூத்த நடிகர்கள் ராஜ்குமார், பர்வதம்மா ஆகியோரின் மகனான புனீத் ராஜ்குமார் தனது திரையுலகப் பயணத்தைக் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியவர். 1985ஆம் ஆண்டு, கன்னட மொழியில் வெளியான `பெட்டடா ஹூவு’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் புனீத் ராஜ்குமார். யுவரத்னா, ராஜகுமாரா, அஞ்சனி புத்திரா, பவர், அப்பு முதலான 29 திரைப்படங்களில் நடித்தவர் புனீத் ராஜ்குமார். தனது ரசிகர்களால் அன்போடு `அப்பு’ என்று அழைக்கப்பட்டவர். அவரது எதிர்பாரா மரணம் அவரது பல கோடி ரசிகர்களின் இதயங்களில் கனத்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் இந்தியத் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகவும் கருதப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Puneeth Rajkumar (@puneethrajkumar.official)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget