மேலும் அறிய

Kangana Ranaut: ஆசிட் வீச்சால் வெந்து போன முகம்; 52 அறுவை சிகிச்சை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத் தனது சகோதரிக்கு நடந்த பயங்கரமான ஆசிட் வீச்சு குறித்து பகிர்ந்து இருக்கிறார்.

'தாம் தூம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாடல் அழகி கங்கனா ரனாவத்  அதற்கு பிறகு பாலிவுட்டில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நடிகை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது சகோதரிக்கு நடந்த ஆசிட் வீச்சு குறித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

2008ம் ஆண்டு மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கங்கனா ரனாவத்  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு இசைமைத்து இருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை தொடர்ந்து  கங்கனா ரனாவத் பாலிவுட் பக்கம் செல்ல அங்கு மிகவும் பிஸியான ஒரு நடிகையாக உள்ளார். 

Kangana Ranaut: ஆசிட் வீச்சால் வெந்து போன முகம்; 52 அறுவை சிகிச்சை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த கங்கனா!

ஆசிட் வீச்சின் எதிரொலி :

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று 17 வயது சிறுமி ஆசிட் வீசப்பட்டதன் எதிரொலியாக பாலிவுட் நடிகை  கங்கனா ரனாவத்  தனது சகோதரிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்த உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். 

மனநிலையை பாதித்த பயங்கரவாதம் :

எனது சகோதரி ரங்கோலி சாண்டல் 21 வயது இருக்கும் போது எவனோ ஒரு ரோடு சைடு ரோமியோ ஆசிட் வீசி சென்றுவிட்டான். அவன் செய்த அந்த பயங்கரமான காரியத்தால் கிட்டத்தட்ட என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

எங்கள் குடும்பத்தால் அந்த துயரத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் எங்களின் ஒட்டுமொத்த குடும்பமே மிகுந்த மனவேதனைக்கு ஆளானது. அதன் காரணமாக ஒவ்வொரு முறை என்னை யாராவது கடந்து செல்லும் போதெல்லாம் என் மீதும் ஆசிட் வீசி விடக்கூடும் என்ற பயத்தால் நானும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

ஒரு பைக் அல்லது ஒரு கார் என்னை தாண்டி செல்லும் போது எனது முகத்தை நான் மூடி கொள்ளும் அளவிற்கு என் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற அட்டூழியங்கள், வன்முறைகள் நின்ற பாடாக இல்லை. இது போன்ற குற்றங்களுக்கு அரசாங்கம் மிகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என ஒரு குறிப்பை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.  

View this post on Instagram
 
A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

இந்திரா காந்தியாக கங்கனா :

ரங்கோலி சாண்டலுக்கு தற்போது திருமணம் முடிந்து ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். மேலும் கங்கனா, தற்போது நடித்து வரும் எமர்ஜென்சி படத்தில் பிஸியாக இருக்கிறார். அதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அனுபம் கெர், ஷ்ரேயாஸ் தல்படே, மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் மற்றும் சதீஷ் கௌஷிக் ஆகியோர் நடித்துள்ளனர்.  

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget