மேலும் அறிய

`ரசிகர்களுக்கு நன்றிக்கடனை செலுத்துவது எப்படி?’ - லோகேஷ் கனகராஜூக்குப் பாடம் எடுத்த கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் `விக்ரம்’ படத்தின் வெற்றி மூலமாக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் `விக்ரம்’ படத்தின் வெற்றி மூலமாக மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றி  தன்னை நெகிழ வைத்திருப்பதாகவும், இதுபோல உணர்ச்சிகரமாக உணர்ந்தது இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை எப்படி திருப்பி தருவது என சிந்திப்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் அவரிடம் இந்த வெற்றியோடு மனநிறைவு அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். 

நடிகர்கள் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ள `விக்ரம்’ திரைப்படம் வெளியாகி மூன்றே நாள்களில் சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

`ரசிகர்களுக்கு நன்றிக்கடனை செலுத்துவது எப்படி?’ - லோகேஷ் கனகராஜூக்குப் பாடம் எடுத்த கமல் ஹாசன்!

இதுகுறித்து ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `நான் இப்போது போல இதுவரை உணர்ச்சிகரமாக இருந்ததே இல்லை. என் மீதும், `விக்ரம்’ படத்தின் மீதும் நீங்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்கள் காட்டிய அன்பை எப்படி மீண்டும் உங்களிடம் தரப் போகிறேன் என்று தெரியவில்லை. கமல் ஹாசன் சாருக்கும், எனது குழுவினருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.. லவ் யூ ஆல்’ எனத் தெரிவித்துள்ளார். 

இதற்குப் பதிலளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், `ரசிகர்களிடம் வைத்திருக்கும் கடனை அடைக்கும் ஒரே வழி, மன நிறைவு அடையாமல் இருப்பது தான். மீண்டும் மக்களுக்குப் பிடித்தவாறான கடும் உழைப்பைக் கொடுத்தால் மக்கள் எப்போதும் மதிப்பார்கள். எனது ஊக்கம் அனைத்தும் மக்களின் அன்பில் இருந்து வருகிறது. உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள். ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இப்போது உங்களை ஆதரித்ததைப் போல எப்போதும் உங்களை ஆதரிக்கும்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா கௌரவத் தோற்றத்தில் `விக்ரம்’ படத்தில் நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து `கைதி 2’ படத்திலும், `விக்ரம்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் முக்கிய வில்லனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget