கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கும் ‘சித்தா’ இயக்குநர்.. வெளியான டெஸ்ட் ஷூட் புகைப்படம்!
சித்தா , வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு அருண்குமார் உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் வெளியாகிவந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நிலுவையில் நிற்கும் கமல் படங்கள்
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த படங்கள் படப்பிடிப்பிற்கு செல்வதில் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து வருகிறது. முன்னதாக எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்பறிவு இயக்கத்தில் கமல் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தின் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அடுத்தபடியாக ரஜினியுடன் நெல்சன் இயக்கத்தில் கமல் இணைந்து நடிக்க இருக்கிறார். இதனிடையில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் கமலின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது
கமலை இயக்கும் அருண்குமார்
எஸ்.யு. அருண்குமார் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன் பாகம் 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். குறிப்பாக, ‘சித்தா’ திரைப்படம் மூலம் அவரது இயக்கம் கவனம் பெற்றது. தற்போது கமல்ஹாசனுடன் அவர் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது இந்த புதிய படத்திற்கான டெஸ்ட் ஷூட் இன்று நடைபெற்றது. அதன் புகைப்படத்தை ராஜ்கமல் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு 'தோ வரேன்' என கேப்ஷன் பதிவிட்டுள்ளனர். கமலின் 238 ஆவது படமாக இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
தோ வாரேன் 🔥@ikamalhaasan #SUArunkumar#KamalHaasan #Mahendran@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/1GMUOdcSH6
— Raaj Kamal Films International (@RKFI) September 3, 2026
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















