Kajal Aggarwal Baby Name: அன்பும் ஆசிர்வாதமும்...! குழந்தையின் பெயரை இன்ஸ்டாவில் வெளியிட்ட காஜல் - கௌதம் கிட்ச்லு ஜோடி!
பிரபல நடிகை காஜல் அகர்வாலின் குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
![Kajal Aggarwal Baby Name: அன்பும் ஆசிர்வாதமும்...! குழந்தையின் பெயரை இன்ஸ்டாவில் வெளியிட்ட காஜல் - கௌதம் கிட்ச்லு ஜோடி! kajal aggarwal first baby name revealed, gautham kitchlu announced on instagram Kajal Aggarwal Baby Name: அன்பும் ஆசிர்வாதமும்...! குழந்தையின் பெயரை இன்ஸ்டாவில் வெளியிட்ட காஜல் - கௌதம் கிட்ச்லு ஜோடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/8d5e0867a5d4837c55cee59abe5c6849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் கிட்ச்லு ஆகியோர் தங்களது முதல் குழந்தையை ஒன்றாக வரவேற்றனர். இதனை அவர்கள் தங்களது சமூகவலைதள பக்கம் மூலம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த குழந்தைக்கு நீல் கிட்ச்லு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை கெளதம் கிட்ச்லு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
View this post on Instagram
காஜல் மற்றும் கௌதம் கிட்ச்லு கடந்த 2020 அக்டோபர் 30 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி மிகவும் நெருக்கமானவர்கள் முன்னிலையில் இந்தத் திருமண விழாவை நடத்தியது. அதனைத்தொடர்ந்து கர்ப்பமான காஜல், தற்போது ஆண்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.
முன்னதாக, தனது கர்ப்பப் பயணம் பற்றிப் பேசிய காஜல், முன்பு ஒரு பதிவில், “என் வாழ்க்கை, என் உடல், என் வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் கையாண்டு வருகிறேன். ஒரு சிறிய குழந்தையைப் பெற்றெடுக்கும் முழு செயல்முறையும், நாம் அனுபவிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு கொண்டாட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனது உணர்வுகளைச் சமாளிக்க உதவும் சில குறிப்புகள் கீழே உள்ளன. என்னுடன் சேர்ந்து இந்த அற்புதமான கட்டத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன். என் அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நடிகை தனது குழந்தை பிறந்ததை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், காஜல் மற்றும் கௌதம் ஆகியோருக்கு ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)