மேலும் அறிய

Kabzaa: உபேந்திராவின் பிறந்த நாள் பரிசு! நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்!

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர்.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ பட நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'கப்ஜா' படத்தின் டீசர்.  

கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. 


Kabzaa: உபேந்திராவின் பிறந்த நாள் பரிசு! நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்!

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருககிறார்.  இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

படத் தொகுப்பு பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை  ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் உபேந்திராவின் ரசிகர்களும், நடிகர் கிச்சா சுதீப்பின் ரசிகர்களும், கன்னட திரையுலக ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். டீசருக்கு கிடைத்து வரும் பேராதரவை கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், 'கப்ஜா' படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரமாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். ” என்றார். 
 
'கே ஜி எஃப் 1 & 2 படத்தின் வெற்றிக்கு  இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பங்களிப்பும் ஒரு காரணம். இந்நிலையில் 'கப்ஜா' படத்திற்கும் ரவி பஸ்ரூர்  இசையமைத்திருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகம் புதிய வீரியத்துடன் வித்தியாசமான படைப்புகளை இந்திய அளவில் வழங்கி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

"'அன்பே டயானா' குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்" – ரோஜா, சேத்தன், சமுத்திரக்கனி, சசிகுமார் பாராட்டு
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்
பெரம்பூரை இதுவரை யாரும் காட்டாத வகையில் பதிவு செய்துள்ளோம்" அன்பே டயானா படக்குழு நம்பிக்கை
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
உங்க முதல்வரும் நடிகர் தான்..காவல் அதிகாரிகளுடன் சூர்யா ரசிகர்கள் வாக்குவாதம்..என்ன நடந்தது?
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்?.. வெளியான ஸ்க்ரீன்ஷாட்!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
Embed widget