மேலும் அறிய

Devara : முதலில் பிரபாஸ்.. இப்போ ஜூனியர் என்.டி.ஆர்.. எதுக்கும் ரெடியா இருங்க..மீண்டும் வில்லனாக சைஃப் அலிகான்

ஆதிபுருஷ் படத்தைத் தொடந்து தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நடிகர் சைஃப் அலிகான். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் என்.டி.ஆர்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தேவரா' படத்தில் இருந்து சைஃப் அலிகானின் 'பைரா' கதாபாத்திரத்தை ஜூனியர் என்டிஆர் வெளியிட்டுள்ளார்!

தேவாரா

2024-ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

போஸ்டரை வெளியிட்ட ஜூனியர் என்.டி.ஆர்

இன்று சைஃப் அலிகானின்  பிறந்தநாளை இன்று கொண்டாடும் விதமாக  இப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் படத்தில் இருந்து சைஃப் அலிகானின் கதாபாத்திரமான 'பைரா'வின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், சைஃப் அமைதியான நீர் மற்றும் மலைகளின் பின்னணியில் நிற்பதைக் காணலாம். இந்த எல்லா விஷயங்களும் நிச்சயம் ‘தேவரா’ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. படத்தில் இருந்து சைஃப் அலிகானின் தோற்றத்தைப் பகிர்ந்து, ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருப்பதாவது, ‘’பைரா” பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைஃப் சார்!’ என்று கூறியுள்ளார்.

அனிருத் இசை.. ஜான்வி கபூர் வருகை

நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவரா’. இப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் கலை இயக்குநராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இப்படம் தெலுங்கு திரையுலகில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மைண்டு வாய்ஸ் கேட்கிறதா?

முன்னதாக பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்தார் சைஃப் அலி கான். படுமோசமான கிராஃபிக்ஸ் மற்றும் மிரட்டலாக பேசுகிறேன் என்று கரகரப்பான குரலுல் சைஃப் அலி கானின் குரல் என அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் ரசிகர்கள் வெளிவராத நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு நடிகருக்கு வில்லனாக பார்த்து கொஞ்சம் திகிலடைந்துதான் இருக்கிறார்கள் ரசிகர்கள். எதற்கும் மனதை திடமாக வைத்திருங்கள் மக்களே.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget