Cinema Headlines : வரலட்சுமி திருமண வரவேற்பில் பிரபலங்கள்...வைரலாகும் கமலின் லுக்..சினிமா செய்திகள் இன்று
July 4 Cinema Headlines : இன்று ஜூலை 4 ஆம் தேதி வெளியாகியுள்ள சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
வரலட்சுமி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள்
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சரத்குமார் ராதிகா தம்பதியின் மூத்த மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் - நிக்கோலாய் சச்தேவ் (Varalaxmi - Nicholai Sachdev) திருமணம் கடந்த ஜூலை 2 ஆம் தேதி தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது . இதனை அடுத்து நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல அரசியல் பிரமுகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு வருகை தந்த ஜஸ்டின் பீபர்
ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் முகேஷ் மற்றும் நிதா அம்பானி தம்பதியின் இளை மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி அதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் திருமணத்திற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை குஜராத் ஜாம் நகரில் மிக உலகத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள், உலகின் பணக்கார பிரமுகர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டார்கள். தற்போது மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தில் பிரம்மாண்ட வீடான ஆண்டிலியாவில் திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 5 ஆம் தேதி சங்கீத் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதனை முன்னிட்டு இன்று மும்பை வந்து சேர்ந்துள்ளார் ஜஸ்டின் பீபர் . இந்த இசை நிகழ்ச்சிக்காக ரூ 83 கோடி ஜஸ்டின் பீபர் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரலாகும் கமலின் லுக்
பிரபாஸின் கல்கி படத்தில் கமல் நடித்துள்ள சுப்ரீம் யாஸ்கின் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . பலர் கமலின் தோற்றத்தை பாராட்டி வரும் நிலையில் இப்படத்திற்காக கமலுக்கு முன்பு தேர்வு செய்யப் பட்டு பின் நிராகரிப்பட்ட லுக் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபாஸ் திஷா பதானி காதல்
பாலிவுட் முன்னணி நடிகையான திஷா பதானி முன்னதாக நடிகர் டைகர் ஷ்ராஃபை காதலித்து வந்தார். அவருடன் பிரேக் அப் ஏற்பட்டபின் தற்போது சிங்கிளாக வலம் வருகிறார். பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளியாக கல்கி படத்தில் ராக்ஸீ என்கிற சிறிய கதாபாத்திரத்தில் திஷா பதானி நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் கங்குவா படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். தற்போது நடிகை திஷா பதானி தனது கையில் PD என்கிற இரு வார்த்தைகளை டாட்டூவாக பதிந்துள்ளார். பலர் இதில் P என்பதற்கு பிரபாஸ் என்று பொருள் என்றும் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறிவருகிறார்கள். இதை முழுவதுமாக மறுக்காமல் தனது கையில் இருக்கும் டாட்ட்டூவிற்கு என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை ஊக்குவித்து வருகிறார் திஷா பதானி