Jigarthanda DoubleX: மாஸ் காட்டும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்.. கார்த்திக் சுப்பராஜ் சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் 2014ஆம் ஆண்டு “ஜிகர்தண்டா” என்ற படத்தை இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் அசால்ட் சேது கேரக்டரில் வில்லனாக மிரட்டிய பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இப்படியான நிலையில் 9 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா படத்தின் 2 ஆம் பாகம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்ற பெயரில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, இளவரசு,நவீன் சந்திரா, சந்திரா நடராஜன், சத்யன், அரவிந்த் ஆகாஷ், பவா செல்லதுரை, விது, கபிலா வேணு என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மாஸ் காட்டிய கதை
தமிழ் சினிமாவுக்கும், படங்களின் 2 ஆம் பாகத்துக்கும் எப்போதும் ராசியாக இருந்ததில்லை. அந்த கூற்றை சுக்குநூறாக உடைத்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம். அட்டகாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் நடிகர் ராகவா லாரன்ஸூக்கு இப்படியெல்லாம் நடிக்க தெரியுமா? என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட வியந்து பாராட்டினார். மேலும் நடிப்பு ராட்டசன் என சொல்லும் அளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தனது கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். மேலும் காலம் காலமாக சொல்லியும், சொல்லாமல் விட்ட மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை மிகத் தைரியமாக உடைத்து பேசியதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் சம்பள விவரம்
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தொடர்ந்து வசூலில் நல்ல நிலையில் இருக்கும் நிலையில் அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சம்பள விவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்துக்காக ரூ.7 கோடி அவர் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Leo OTT Release: “அண்ணன் வர்றார் வழிய விடு” .. ஓடிடிக்கு வரும் லியோ படம்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!