மேலும் அறிய

Jeremy Renner: கொட்டிய பனி.. கட்டுப்பாட்டை இழந்த வாகனம்.. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்..!

மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடித்த முக்கிய நடிகர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்;

மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் பிரபலாமானவர் ஜெர்மி ரன்னர். பல்வேறு சக்திகளை கொண்ட சூப்பர் ஹீரோக்களுக்கு மத்தியில் வெறும் வில் - அம்புகளை கொண்டு,  சாகசம் செய்யும் அவரது கதாப்பாத்திரம், பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்காக இரண்டு முறை இவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

Jeremy Renner: கொட்டிய பனி.. கட்டுப்பாட்டை இழந்த வாகனம்.. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்..!

ஜெர்மி ரென்னர் (courtesy: getty)

விபத்தில் சிக்கிய ஜெர்மி ரென்னர்:

இதனிடையே, ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது; இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுப் பகுதியில் குவிந்திருந்த பனியை அகற்றும் பணியில் ஜெர்மி ரென்னர் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் விபத்தில் சிக்கினார்.

மருத்துவ அறிக்கை:

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு,  விமானம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; அங்கு உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது; 

அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், “ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஜெர்மியின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது; அவர் விரைந்து குணம் பெற ரசிகரகள் பலரும் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மார்வெல் திரையுலகம்:

உலகிற்கு வரும் ஆபத்துகளை சூப்பர் ஹீரோக்களை கொண்டு  தடுப்பதை மட்டுமே,  முக்கிய கதைக்களமாக கொண்டு மார்வெல் நிறுவனம் தனக்கென ஒரு தனி திரையுலகை கட்டமைத்துள்ளது; உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் படங்கள், சர்வ சாதாரணமாக சில ஆயிரம் கோடிகளை வசூலாக குவித்து வருகின்றன. மார்வெல் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் ரூ.22 ஆயிரம் கோடியை வசூலித்து,  உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது. 

ஹாவ்க்-ஐ கதாபாத்திரம்:

அந்நிறுவனத்தின் சார்பில் 2011ம் ஆண்டு வெளியான தோர் திரைப்படத்தில் கிளிண்ட் பார்ட்டன்/ஹாவ்க்-ஐ கதாபத்திரத்தில் அறிமுகமானார் ஜெர்மி ரென்னர். அதைதொடர்ந்து வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் ஜெர்மி முக்கிய பங்கு வகித்தார். மார்வெல் திரைப்படங்களில் அவர் இடம்பெறும் அணியானது, இதுவரை தோல்வியையே சந்தித்தது இல்லை. அவெஞ்சர்ஸ், ஏஜ் ஆஃப் அல்ட்ரான், சிவில் வார் மற்றும் எண்ட் கேம் என அனைத்து திரைப்படங்களிலும், ஜெர்மி ரன்னர் நடித்த ஹாவ்க்-ஐ கதாபாத்திரம் இடம்பெற்ற அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அவரது நடிப்பில் டிஸ்னி பிளஸ்ஸில் சீரிஸ் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!

Embed widget