மேலும் அறிய

Jayam Ravi Wife: வாந்தியை கையால் பிடித்த கணவர்.. 100க்கு 100 மார்க்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஜெயம் ரவியின் மனைவி!

Jayam Ravi Wife : ஜெயம் ரவி ஒரு சிறந்த கணவர். அவருக்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பேன் என நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்த மனைவி ஆர்த்தி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானதால் அவர் அப்படத்தின் பெயரை அடையாளமாகக் கொண்டு ஜெயம் ரவி என அழைக்கப்படுகிறார். காமெடி, த்ரில்லர் முதல் ஆக்சன் படங்கள் வரையில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசத்தலாக நடிக்கக்கூடிய ஜெயம் ரவிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

Jayam Ravi Wife: வாந்தியை கையால் பிடித்த கணவர்.. 100க்கு 100 மார்க்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஜெயம் ரவியின் மனைவி!

அசலாட் செய்பவர்:

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிதேவன் கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்திருந்தார். கார்த்தி, விக்ரம் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ஜெயம் ரவிக்கு அது மிகச் சிறப்பான படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியான சைக்கோ திரில்லர் ஜானரில் வெளியான 'இறைவன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.  

சாக்லேட் பாயாக வலம் வரும் ஜெயம் ரவிக்கு 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அழகான இரு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவியும் அவரது மனைவியும் ஆதர்ச தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஆர்த்தி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் ஜெயம் ரவியின் மறுபக்கம் குறித்து ஸ்வாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை பகிர்ந்து இருந்தார். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மனைவி நெகிழ்ச்சி :

ஜெயம் ரவி ஒரு மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகவும் அன்பான பொறுப்பான கணவரும் கூட. ஆர்த்தியின் பிரசவ காலத்தில் ஜெயம் ரவி எப்படி ஆர்த்தியை பார்த்து கொண்டார் என்பது குறித்து கூறியிருந்தார். “குறித்த நாளுக்கு முன்னரே என்னுடைய முதல் பிரசவம் நடைபெற்றதால் அந்த நேரத்தில் அவரால் என்னுடன் இருக்க முடியவில்லை. அவருடைய தொழில் சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் நான் கர்ப்பமாக இருக்கும் போது அவர் என்னை மிகவும் அக்கறையுடன் பார்த்து கொண்டார். நான் வாந்தி எடுத்தால் கூட அதை அவர் தன்னுடைய கையாலேயே பிடித்துவிடுவார். 

Jayam Ravi Wife: வாந்தியை கையால் பிடித்த கணவர்.. 100க்கு 100 மார்க்.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஜெயம் ரவியின் மனைவி!

விடியற்காலை மூன்று மணிக்கு எழுப்பி எனக்கு பசிக்கிறது என்று சொன்னால் கூட என்னுடன் எழுந்து வந்து உதவி செய்வார். பின்னர் ஐந்து மணிக்கு எழுந்து ஷூட்டிங் போவார். எனக்கு மிகச் சிறந்த கணவர் கிடைத்துள்ளார். அவருக்கு நான் 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பேன்” என தன்னுடைய இனிமையான அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. 

பிஸி ஷெட்யூல்:

ஜெயம் ரவி தற்போது மிகவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் JR30, மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் KH234 படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், மோகன் ராஜா இயக்கும் தனிஒருவன் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அர்ஜுனன் ஜூனியர் இயக்கும் ஜீனி, ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் சைரன், ராஜேஷ்.எம் இயக்கும் சகோதரன், சுந்தர். சி இயக்கும் சங்கமித்ரா என கைவசம் அரை டஜன் படங்களும் மேல் வைத்துள்ளார். வரும் 2024ம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் எக்கச்சக்கமான படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
TN Rain: உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
உருவாகியது.! ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது கரையை கடக்கும்? எங்கு கனமழை பொழியும்?
Embed widget