மேலும் அறிய

கேங்ஸ்டராக களம் இறங்கும் ஜெயம் ரவி... ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ

Jayam Ravi: "பூலோகம்" படத்தை அடுத்து மீண்டும் "அகிலன்" திரைப்படம் மூலம் இணைய உள்ளார்கள் ஜெயம் ரவி - கல்யாண் கிருஷ்ணன். நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi as Gangster in 'Agilan' : கடத்தல்காரராக ஜெயம்ரவி நடிக்கும் 'அகிலன்' திரைப்படம் நவம்பரில் வெளியாகுமா? 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒரு திறமையான நடிகர் ஜெயம் ரவி. இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன் 1" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அந்த படத்தின் ரிலீஸ்காக திரை ரசிகர்களை போல் அவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். 

 

கேங்ஸ்டராக களம் இறங்கும் ஜெயம் ரவி... ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ

 

ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்' :
 
நடிகர் ஜெயம் ரவி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் "பூலோகம்" படத்தை அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த கூட்டணியில் உருவாகும் "அகிலன்" திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில மாற்றங்களால் இப்படம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது என கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் விரைவில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை. 

 

 

கேங்ஸ்டராக ஜெயம் ரவி :

ஜெயம் ரவி நடிக்கும் "அகிலன்" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன். ஜெயம் ரவி ஒரு கேங்ஸ்டராகவும், பிரியா பவானி ஷங்கர் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். சென்னை துறைமுகத்தை சுற்றிலும் நடைபெறும் கடத்தலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் விவேக். இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். இது தவிர மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. 

 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
Embed widget