மேலும் அறிய

“இப்ப இல்ல... அப்போவே...” - முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர் ஜெயம் ரவி...!

மேயராக இருந்து சிங்கார சென்னையாக எப்போது மாற்றினாரோ, அப்போதிலிருந்தே நம்ம ஊர் மேலயும், நாட்டு மேலயும் மரியாதை கொண்டவர் முதலமைச்சர்.

சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த விழாவில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, இந்தியாவில் நம்பர் ஓன் முதலமைச்சர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார். ’மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம். அவரை வருக..வருக.. என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். கொரோனாவின் இரண்டாவது அலையில் பதவியேற்று 2021இல் ரேங்கிங்கில் நம்பர் ஒன் வந்த முதலமைச்சர் அவர். அது சாதாரண விஷயம் கிடையாது. மேயராக இருந்து சிங்கார சென்னையாக எப்போது மாற்றினாரோ, அப்போதிலிருந்தே நம்ம ஊர் மேலயும், நாட்டு மேலயும் மரியாதை கொண்டவர். அவர் இந்த விழாவில் கலந்து கொண்டு, விழாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்” என்று கூறினார்.

முன்னதாக, இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா துறை மீண்டு வருகிறது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய தொழிலாக சினிமா விளங்குகிறது. பல குடும்பங்கள் பிழைக்கிறது. பொழுதுபோக்கு என சுருக்கி கூற முடியாது. நான் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகிறது. சில நாட்களுக்கு முன்னாள் தொழில் துறை முன்னேற்றத்திற்காக துபாய் அபுதாபி சென்றேன். நான் முதல்வராக கலந்து கொள்ளும் முதல் கலைத்துறை நிகழ்வு. முதல்வாராக இருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்படம் தயாரித்துள்ளேன். சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். எனவே இங்கு ஆர்வத்தோடு வந்துள்ளேன். முதல்வராக பார்க்காமல் உங்களில் ஒருவனாக பாருங்கள். திமுகவும் திரை துறையும் பிரிக்க முடியாது. அப்பா கலைஞர் முதல் எனது மகன் உதயநிதி வரை திரைத்துறையில் பங்கேற்றுள்ளோம். எனது குடும்பத்தையும் திரை துறையையும் பிரிக்க முடியாது. இணைய திரையரங்கம், செல்போன் திரையரங்கு வந்து விட்டது. திறமையானவர்கள் பாராட்டபட வேண்டும்.  சிறந்த படங்களுக்கு விருது வழங்க வேண்டும். நமக்கு நீண்ட வரலாறு உள்ளது. மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியும் அவசியம். தென்னக திரைப்பட உலகம், இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது. திரைப்படத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது. அனைத்து உதவிகளும் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும்” என்று கூறினார்.

 மேலும், “புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என திரைப்படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்ட வேண்டியது. அதுபோல குட்கா, கஞ்சா அதிகமாகி வருவதால் அது குறித்த விழிப்புணர்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கிறேன். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karuppu Release Date: கிரிக்கெட் நேரலையில் புலம்பிய ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு ரிலீஸ் தேதி இதுவா?
Karuppu Release Date: கிரிக்கெட் நேரலையில் புலம்பிய ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு ரிலீஸ் தேதி இதுவா?
மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!
மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!
நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் டிரெய்லர்
நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் டிரெய்லர்
பெண்ணே ஆகப்பெரும் சக்தி...த்ரிஷா போட்ட போடில் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்
பெண்ணே ஆகப்பெரும் சக்தி...த்ரிஷா போட்ட போடில் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
MS Dhoni: ”சிரிப்பு நல்லா இருக்குயா” நான் கம்பீர் மாதிரி இல்லை - 2 வருடங்களுக்கு பிறகு தோனி போட்ட பதிவு
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Suryakumar Yadav: ஸ்கேம் செய்த சூர்யகுமார்.. கேப்டன் பதவி தப்புமா? கோலியால முடியல, லெஜண்ட் பட்டம் இருக்கா?
Gautam Gambhir:
Gautam Gambhir: "ரெண்டு பேருக்கு தான் இந்த கப் சொந்தம்" டார்கெட் செய்த கோச், ஜெய் பாய்க்கு நன்றி - கம்பீர் பேச்சு
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
Beach Wedding : வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Embed widget