மேலும் அறிய

JanaNayagan : ஃபர்ஸ்ட் லுக் முதல் ரிலீஸ் வரை...ஜனநாயகன் படம் கடந்து வந்த பாதை

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் அறிவிப்பு முதல் ரிலீஸ் வரை கடந்து வந்த சவால்கள் ஏராளம்

தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள  'ஜன நாயகன்' நாளை ஜூலை 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறிவிப்பு முதல் ரிலீஸ் வரை பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது

ஜனநாயகன் கடந்து வந்த பாதை 

அறிவிப்பு

விஜயின் கடைசி படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில்  2024 செப்டம்பர் 1-ஆம் தேதி இயக்குநர் எச். வினோத் - விஜய் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2025 டிசம்பர் 2 அன்று மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கியது.

ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

2026 புத்தாண்டை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தணிக்கைக்கு விண்ணப்பம் 

டிசம்பர் 18 அன்று தணிக்கைக்காக படம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 2026 ஜனவரி 9 அன்று பொங்கல் வெளியீடாக வர இருந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் இது படத்தின் ரிலீஸை கூடுதலாக தாமதப்படுத்தியதால் தயாரிப்பு நிறுவனம் தங்களது மனுவை திரும்ப பெற்றது

ஆடியோ லாஞ்ச்

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது. மலேசியாவில் உள்ள புகிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து கிட்டதட்ட 85 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். மலேசியாவில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்கிற கின்னஸ் சாதனையை  ஜன நாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி படைத்தது

இணையத்தில் லீக் 

படத்தின் ரிலீஸ் தாமதமானதால் ஏற்கனவே மனவருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி வந்து சேர்ந்தது. ஜனநாயகன் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. முதலில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் நள்ளிரவில் முழு படமும் இணையத்தில் வெளியானது. இது இந்தியளவில் மிகப்பெரிய பேசுபொருளானதுஇணையத்தில் மட்டுமே கிட்டதட்ட ஒரு கோடி பேர் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துள்ளார்கள்

A சான்றிதழ்

இத்தனை சவால்களை கடந்து கடந்து ஜூலை 9 ஆம் தேதி ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியது. தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை சவால்களை கடந்து வந்த போதும் ஜனநாயகன் படத்திற்கு மக்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. உலகம் முழுவதும் படத்திற்கான முன்பதிவு நடந்து வரும் நிலையில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து வருகின்றன.

படக்குழு பற்றி 

எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சர்ச்சை, நீதிமன்ற வழக்கு, வெளியீட்டு தாமதம் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இறுதியாக ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget