மேலும் அறிய

Jailer Success Meet: 'ரத்தமாரே' பாட்டு ரஜினி சார் கூட கெடச்சது என் பாக்கியம்... ஜெயிலர் சக்சஸ் மீட் விழாவில் வசந்த் ரவி நெகிழ்ச்சி!

“நான் உங்களை மிஸ் செய்வேன் என ரஜினி சாரிடம் சொன்னபோது அவரும் அதையே சொன்னார்” என வசந்த் ரவி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் சக்ஸஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடித்த நடிகர் வசந்த் ரவி இந்த விழாவில்  பேசியதாவது:

"முதலில் சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு நன்றி. நெல்சன் சாருக்கு நன்றி. நெல்சன் சார் என்னை இந்தப் படத்துக்காக கூப்பிட்டபோது என்னிடம் முதலில் சொன்னது, இந்தக் கதாபாத்திரம் படத்தில் ரொம்ப முக்கியமான மையமான கதாபாத்திரம்.

அதத் தாண்டி பர்ஃபாமன்ஸ்கான ஸ்கோப் இருக்கு, இது உங்களுக்கு நிறைய பேர் கொடுக்கும், அடுத்த படிக்கு கொண்டு போகும்னு நெல்சன் சொன்னார். அது இப்போ நிறைவேறி இருக்கு.

அனி ப்ரதருக்கு நன்றி. அவர் பாட்டுல இருக்கணும்னு ஒரு ஒரு நடிகரும் ஆசைப்படுவோம், அப்படிதான் எனக்கும் ரத்தமாரே பாடல். ரஜினிகாந்த் சாரோட அந்த மாதிரி ஒரு பாட்டு கெடச்சது என் பாக்கியம்.

அதத் தாண்டி சினிமாட்டோகிராஃபர் விஜய். அவரது வேலைக்கு நான் பெரிய ஃபேன். நான் எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டேனோனு அப்படியே என்ன ஒரு ஒரு ஃப்ரேமும் காமிச்சிருக்கார். இந்தப் படத்துல நடிச்ச எல்லா நடிகருக்கும் நன்றி.. மறக்க முடியாத தருணங்கள். என் முந்தைய படங்கள தாண்டி ஜெயிலர் ஒரு மைல் ஸ்டோன்.

அவரோட ஒரு ஃப்ரேம்ல நடிக்கணும்ங்கறது என் கனவு. என் கரியரின் தொடக்கத்துல இருந்து என் படங்கள பார்த்து பாராட்டி இருக்காரு. ரஜினி சாரோட பழகின ஒரு ஒரு நாளையும் மறக்க முடியாது. படம் முடியற தருணத்துல கடைசி நாள் எனக்கு ரொம்ப உணர்வுப்பூர்வமா இருந்துச்சு.

நான் உங்களை மிஸ் செய்வேன் என ரஜினி சாரிடம் சொன்னபோது அவரும் அதையே சொன்னார். நான் இன்னொரு படம் உங்களுடன் வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னபோது அவரும் அதை சொன்னார். நான் சார் என்று சொன்னாலும் நான் அவரை ஒரு அப்பா போல் தான் பார்க்கிறேன். 

அர்ஜூன் முத்துவேல் பாண்டியனும், ஜெயிலர் படமும் என் வாழ்க்கைல, என் கரியர்ல என் இதயத்துல இந்தப் படம் எப்பவுமே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஆகஸ்ட் 16) ஒரு வாரம் நிறைவடைந்தது.

இந்நிலையில், இந்த  ஒரு வாரத்தில் இப்படம் ரூ.375.40 அதிகமான கோடிகளை வசூலை ஈட்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  தமிழ் சினிமா வரலாற்றில் அதிகம்  வசூலித்த படமாக ஜெயிலர் இதன் மூலம் உருவெடுத்துள்ளது.  இது மிகப்பெரிய சாதனை எனவும்  சன் பிச்சர்ஸ் தெரிவித்துள்ளது.

தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் வசூல் மேலும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget