Jailer: ரெடியா இருங்க...மரண மாஸ் காட்ட வரும் ’ஹுக்கும்’ பாடல்
”ஏய் இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்” என மாஸ் காட்டும் ரஜினியின் ஹுக்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது
![Jailer: ரெடியா இருங்க...மரண மாஸ் காட்ட வரும் ’ஹுக்கும்’ பாடல் jailer second single hukum song release Jailer: ரெடியா இருங்க...மரண மாஸ் காட்ட வரும் ’ஹுக்கும்’ பாடல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/17/206359c411fa6e1940124b9326e662f31689575245363102_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிரடி காட்டி மிரட்ட வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ‘ஹுக்கும்’ என்ற புரோமோவை வெளியிட்ட நிலையில், இன்று மாலை செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சல், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படம் ஜெயிலர். அனிரூத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன்லால், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பதால் பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
படம் ரிலீசாக ஒரு மாதமே உள்ள நிலையில் ஜெயிலர் குறித்த அப்டேட்களும், போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி வருகிறது. படத்தின் புரோமோஷனை ஒட்டி முதல்கட்டமாக வெளியான காவாலா பாடல் மாஸ் காட்டி ஹிட்டடித்தது. தமன்னாவின் நடனமும், சில வினாடிகளே வந்து போகும் ரஜினின் அந்த லுக்கும், ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்தது.
காவாலா பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி பலரையும் அந்த பாடலுக்கு நடனமாட வைத்துள்ளது. இந்த நிலையில், இன்று மாலை செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. ‘ஹூக்கும்’ என பெயரிட்ட இந்த பாடலுக்கான புரோமோவை நேற்று முன் தினம் படக்குழு வெளியிட்டது. அனிரூத்தின் பிஜிஎமில் ரஜியின் மாஸ் டயலாக் வெளியாகி அதிர வைத்துள்ளது. 47 நொடிகளே இருந்த புரோமோவில், ”ஏய் இங்க நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ். அந்த ரூல்ஸ நான் என் இஷ்டத்து அப்பப்ப மாத்திட்டே இருப்பேன். அதை கப்சிப்ன்னு கேட்டுட்டு ஃபால்லோ பண்ணனும். அத விட்டுட்டு ஏதாவது அடாவடித்தனம் பண்ணனும்னு நினைச்ச உன்னை கண்டந்துண்டமா வெட்டி கழிச்சி போட்ருவன். ஹுக்கும்....டைகர் கா ஹுக்கும்....” என ரஜினி பேசும் டயலாக் மாஸ் காட்டி ரசிகர்களுக்கு கூஸ்பம்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
Goosebumps guaranteed #HukumPreview is here!🔥#Hukum ready to 💥🌪️ from July 17th @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @soupersubu #Jailer #JailerSecondSingle pic.twitter.com/BurXQaxOJB
— Sun Pictures (@sunpictures) July 15, 2023
ரஜினியின் இண்ட்ரோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஹுக்கும் பாடல், ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. இணையத்தை கலக்கி வரும் காவாலா பாடலை காட்டிலும், ஹுக்கும் மரண மாஸ் காட்டுமா என்பதை பார்க்க மாலை வரை ரசிகர்கள் காத்திருக்க தான் வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)