மேலும் அறிய

Jailer New Poster: மாஸ் தோரணை.. கெத்தாக என்ட்ரீ கொடுக்கும் முத்துவேல் பாண்டியன்..! ஜெயிலர் ரஜினியின் புது போஸ்டர் ரிலீஸ்..!

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.

ஜெயிலர்:

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இடம்பெற்றிருக்கும் மாஸான  புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் வரிசையில் நெல்சன் திலீப்குமார் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பான் இந்திய படமாக இந்தப் படம் உருவாகும் நிலையில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்களும்,  பிற மொழி உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார்,  தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராஃப் என ஸ்டார்களை நடிக்க வைத்தனர் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 10 ரிலீஸ்:

மேலும் நடிகர்கள் யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி,  ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கமான நெல்சன் படங்களைப் போல் அனிருத் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளனர். கடந்த மே 4ஆம் தேதி இந்தப் படத்தின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

மேலும் டைட்டில் அனவுன்ஸ்மெண்ட் வீடியோ ஒன்றும் பகிரப்பட்ட நிலையில், இதில் அனைத்து நட்சத்திரங்களும் இடம்பெற்று லைக்ஸ் அள்ளினர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மாஸான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. ரஜினிகாந்த் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காரைத் திறந்து கொண்டு வெளியேற தயாராக இருக்கும் வகையில் மாஸான தோரணையுடன் இந்தப் புகைப்படம் அமைந்து சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Jailer New Poster: மாஸ் தோரணை.. கெத்தாக என்ட்ரீ கொடுக்கும் முத்துவேல் பாண்டியன்..! ஜெயிலர் ரஜினியின் புது போஸ்டர் ரிலீஸ்..!

ஆகஸ்ட் 10ஆம் தேதியிலேயே சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் நடித்துள்ள மாவீரன் படம் ரிலீசாக உள்ளதாகவும், ரஜினிகாந்துடன் சிவா மோத உள்ளதாகவும் முன்னதாகத் தக்வல் வெளியானது. தொடர்ந்து மாவீரன் திரைப்படம் முன்கூட்டியே ரிலீசாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயிலர் படத்தின் ரஜினிகாந்த் தன் பகுதிக் காட்சிகளை நடித்து முடித்து விட்ட நிலையில், தற்போது லால் சலாம் பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

தன் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோருடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget