மேலும் அறிய

Jailer First Single Promo: சூப்பர் ஸ்டார் இல்ல... இது தமன்னா பாட்டு...வழக்கம்போல் ஜாலி அப்டேட் கொடுத்த நெல்சன் - அனிருத் காம்போ!

ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக வெளியாகவுள்ள இந்தப் பாடல் நடிகர் ரஜினிகாந்துக்கான பாடல் இல்லை என்றும், தமன்னாவுக்கான பாடல் என்றும் இந்த ப்ரோமோ வீடியோவில் ஹிண்ட் கொடுத்துள்ளனர்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களின் ப்ரோமோவில் ஜாலியாக நடித்திருந்த அனிருத் - நெல்சன் காம்போ இந்த ப்ரோமோ வீடியோவிலும் ஒருவரை ஒருவர் கலாய்த்து நடித்துள்ளனர்.

மேலும், ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக வெளியாகவுள்ள இந்தப் பாடல் நடிகர் ரஜினிகாந்துக்கான பாடல் இல்லை என்றும், தமன்னாவுக்கான பாடல் என்றும் இந்த ப்ரோமோ வீடியோவில் நெல்சன் - அனிருத் இணை ஹின்ட் ஒன்றையும் கொடுத்துள்ளனர்.

காவாலா எனும் தெலுங்கு வார்த்தையுடன் தொடங்கும் இப்பாடல் ஒரு சில விநாடிகளே இந்த வீடியோவில் ஒலிக்கும் நிலையில், ரசிகர்கள் விரைவில் வெளியாகும் முழு பாடலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள இப்படத்தில், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி தெராஃப், சுனில் என பல மொழி சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும் நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ஜாஃபர், விநாயகன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி என பல இடங்களில் நடைபெற்று முடிந்தது.  முன்னதாக படப்பிடிப்பு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் படக்குழு பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின மேலும், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ரஜினிகாந்தின் வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் லைக்ஸ் அள்ளின.

இச்சூழலில் படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ஜூன் 6ஆம் தேதி முழு பாடலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நான்காவது முறையாக அனிருத் - நெல்சன் காம்போ இணைந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்துக்குப் பிறகு அனிருத் இணைந்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன.

மேலும் இந்த மாதம் முடியும் வரை ஜெயிலர் படக்குழு தொடர்ந்து அப்டேட்களை வழங்கி ரஜினிகாந்த் ரசிகர்களை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: ”ஒரே திரைப்படத்தின் மூலம் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்த முடியாது.. ஒன்றிணைந்து பயணிப்போம்” - உதயநிதி ஸ்டாலின்

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget