புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புக் மை ஷோவில் 1.32 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையுடன் ஜெயிலர் 2 இந்திய சினிமாவில் முதல் நாள் விற்பனையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. புக் மை ஷோ தளத்தில் ஒரே நாளில் 1.32 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி, இந்தியத் திரைப்படங்களின் முதல் நாள் டிக்கெட் விற்பனைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதல் நாள் டிக்கெட் விற்பனையில் டாப் 5 படங்கள்
புக் மை ஷோ தளத்தில் முதல் நாள் டிக்கெட் விற்பனையில் அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் புஷ்பா 2 முதலிடத்தில் உள்ளது. துரந்தர் 2 இரண்டாவது இடத்திலும், ஜெயிலர் 2 மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- புஷ்பா 2 – 1.76 மில்லியன் டிக்கெட்டுகள்
- துரந்தர் 2 – 1.64 மில்லியன் டிக்கெட்டுகள்
- ஜெயிலர் 2 – 1.32 மில்லியன் டிக்கெட்டுகள்
- காந்தாரா சாப்டர் 1 – 1.28 மில்லியன் டிக்கெட்டுகள்
- ஜவான் – 1.14 மில்லியன் டிக்கெட்டுகள்
மூன்றாவது இடத்தில் ஜெயிலர் 2
இந்தப் பட்டியலில் 1.32 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையுடன் ஜெயிலர் 2 மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தைவிட அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. 75 வயதிலும் ரஜினிகாந்த் தனது படத்தின் மூலம் இத்தகைய சாதனையைப் படைத்திருப்பது உலகம் முழுவதும் அவருக்கு இருக்கும் பெரும் மக்கள் ஆதரவை காட்டுகிறது
ஜெயிலர் 2
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதல் நாள் வசூல்
முதல் நாள் வசூலைப் பொறுத்தவரை, வர்த்தகத் தளமான Sacnilk வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, ஜெயிலர் 2 உலகளவில் சுமார் ₹125.25 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் நிகர வசூல் சுமார் ₹59.70 கோடி என்றும், வெளிநாடுகளில் சுமார் ₹55 கோடி என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















