Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
ஜெயிலர் 2 படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்தை பாராட்டியதுடன் ஒரு குறிப்பிட்ட காட்சியை நீக்க படக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார்கள்

ஜெயிலர் 2 படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நீக்குவது தொடர்பாக சென்சார் அதிகாரிகளுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்துடன் மோகன்லால், விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் சென்சார் பணிகள் சமீபத்தில் நடைபெற்றதாகவும், படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தை பார்வைட்டி படக்குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள். ஆனால் படத்தில் தலை துண்டிக்கப்படும் காட்சியும், துண்டிக்கப்பட்ட தலை டைனிங் டேபிளில் வைக்கப்படும் காட்சியும் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தக் காட்சியை நீக்குமாறு சென்சார் தரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. அந்தக் காட்சியை நீக்க நெல்சன் விரும்பவில்லை என்றும், அது படத்தில் இடம்பெற்றால் ‘A’ சான்றிதழ் கிடைக்கும் சூழல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, காட்சியை வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்து படக்குழுவுக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்டர் போட்ட ரஜினி
ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளியான கூலி திரைப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் அந்த படத்திற்கான ரசிகர்கள் வரத்து பாதிக்கப்பட்டது. கூலி படத்தில் நடந்த தவறு இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதால் ரஜினிகாந்த் U/A சான்றிதழுக்காக அந்தக் காட்சியை நீக்க சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதற்கிடையே, ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று ‘ஜெயிலர் 2 ரேவ்’ என்ற பெயரில் நடைபெறுகிறது. இதனுடன் படத்தின் முழு இசை ஆல்பமும் இன்று வெளியாகிறது. ஏற்கனவே ‘அல்ல போலேலோ’, ‘ஒன் சன் ஒன் மூன்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று முழு ஆல்பமும் ரசிகர்களை சென்றடைகிறது.
மேலும், ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















