ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 படத்தின் முழு ஆல்பம் வெளியாகியுள்ள நிலையில், அனிருத் இசையமைத்த 12 பாடல்கள் குறித்து இந்த ஆல்பம் ரிவியூவில் பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முழு ஆல்பம் இன்று வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆல்பத்தில் ஏற்கெனவே 7 பாடல்கள் ரசிகர்களிடம் சென்றடைந்த நிலையில், மீதமுள்ள 5 பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளன. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியு
முன்னதாக வெளியான 7 பாடல்களில் ‘அல போலேலோ’, ‘ஒன் நேம்’, ‘ஒன் சன் ஒன் மூன்’, ‘ஜெயிலர் 2 தீம்’, ‘ஹுக்கும் ரீலோடட்’, ‘திலீப் தீம்’, ‘பிந்தாஸ்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ‘அலா போலேலோ’ பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ‘ஒன் நேம்’ பாடலுக்கு ஹைசன்பெர்க் வரிகள் எழுதியுள்ள நிலையில், ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலை ஹைசன்பெர்க் மற்றும் சூப்பர் சுப்பு இணைந்து எழுதியுள்ளனர். இதில் அனிருத் மற்றும் எம்.எஸ்.கிருஷ்ணா பாடியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 5 புதிய பாடல்களில் முதலில் கவனம் பெறுவது
‘வேறமாரி’. இயக்குநர் நெல்சனின் புகழ்பெற்ற வசனமான 'வேறமாரி' என்கிற வார்த்தையை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க ஃபன் மற்றும் ராப் கலந்து இந்த பாடம் அமைந்துள்ளது. இதில் “எங்கள கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போறது ஈஸி இல்ல... கஷ்டம்” என்ற புஸ்ஸி ஆனந்த் பேசிய வரியும் இடம்பெற்றுள்ளது. . இந்தப் பாடலுக்கு தமிழ்ஆதவன் வரிகள் எழுதியுள்ளார்.
அடுத்ததாக ‘நேற்று போனவை’ இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் ரத்தமாரே பாடலைப் போல் இந்த பாகத்தில் இந்த பாடல் என்று சொல்லலாம். கடந்த காலத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ள இந்த உணர்வுப்பூர்வமான பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுதியுள்ளார்.
‘புட்டாப்பு கேங்’ பாடலும் ஃபன் ஜோனில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கும் தமிழ்ஆதவன் வரிகள் எழுதியுள்ளார்.
அதேபோல் ‘ஷைத்தான்’ பாடல் ஏற்கெனவே வித்யா பாலனின் கதாபாத்திர அறிமுக வீடியோவில் இடம்பெற்றிருந்தது. தற்போது முழுப் பாடல் வெளியாகியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தின் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தப் பாடலின் பின்னணியில் ‘வர்மன்’ கதாபாத்திரத்தின் தீம் இசையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சூப்பர் சுப்பு மற்றும் விவேக் இணைந்து எழுதியுள்ளனர்.
இறுதியாக ‘தில் ஹாரேயா’ என்ற இந்தி பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் இந்தி வரிகளுடன் கிளாசிக்கல் இசைத் தன்மையில் உருவாகியுள்ளது. இதற்கு ரிதேஷ் ஜி. ராவ் வரிகள் எழுதியுள்ளார்.
இதன்மூலம் ‘ஜெயிலர் 2’ ஆல்பத்தில் மாஸ் பாடல்கள் மட்டுமின்றி ராப், எமோஷனல், ஃபன் மற்றும் கிளாசிக்கல் இசை பாணிகளும் இடம்பெற்றுள்ளன. ஜெயிலர் முதல் பாகத்தில் ஹுகும் , காவாலா போன்ற பாடல்கள் வெளியான உடனே வைரல் ஹிட் ஆகின. அதே போல ரத்தமாரே பாடல் படம் வெளியானப்பின் ரசிகர்களை கவர்ந்தது. முதல் பார்வைக்கு ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் இதே அளவு கவர்கின்றனவா என்றால் சந்தேகம் தான். ஆனால் முதல் பாகத்தில் ஹிட் ஆகிய காரணத்தால் அதே மாதிரியான இசையை வழங்க முடிவு செய்யாமல் முற்றிலும் புதிய முயற்சியை அனிருத் இந்த ஆல்பத்தில் கையாண்டிருப்பது பாராட்டிற்குரியது. படம் வெளியானப் பின் இந்த பாடல்களின் பின்னணியுடன் கேட்கையில் நிச்சயம் நம்மை கவரும் என்று எதிர்பார்க்கலாம்
#Jailer2 full album with 12 tracks is all yours 🤘🏻🕺💃https://t.co/jlqmPQ9mKY
— Anirudh Ravichander (@anirudhofficial) September 30, 2026
Love you all ❤️🙏🏻
Superstar @rajinikanth @Nelsondilpkumar @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza… pic.twitter.com/iUyiqaIqhW
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















