Divyadarshini Second Marriage : இரண்டாவது திருமணத்திற்கு தயாரான திவ்யதர்ஷினி? மாப்பிள்ளை யாரு தெரியுமா?
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளியான திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் என ஊடக அறிக்கை ஒன்று கூறுகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!
சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினியாக அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. 1999ம் தொகுப்பாளினியாக தொடங்கிய இவரது பயணம் இன்றும் செவ்வனே தொடர்கிறது. ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற தொகுப்பாளர்களுக்கும் செல்லா குட்டி டிடி தான்.
காபி வித் காதல் :
தொகுப்பாளராக மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள், திரைப்படங்களிலும் நடித்து வரும் டிடி ஒரு ஆசிரியர் மற்றும் தேர்ந்த நடன கலைஞர்; சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், சம்யுக்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, பிரதாப் போத்தன், யோகி பாபு, அமிர்தா என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்திருந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் 'காபி வித் காதல்'. இப்படத்தில் டிடி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரிய திரையில் டிடி தோன்றியது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.
View this post on Instagram
இது தான் அடுத்த பிளானா?
நீண்ட கால நண்பரும் உதவி இயக்குனருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட டிடி கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டார்; அதற்கு பிறகு தனிமையில் தனது பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த டிடி தற்போது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
“Now let’s get you married sista” mode @arun_capture1 photography #Nayanthara #VigneshShivan #wikkynayanwedding #saree #Wedding pic.twitter.com/83y5Gm4gPJ
— DD Neelakandan (@DhivyaDharshini) June 9, 2022
கிடப்பில் இருக்கும் படங்கள் :
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திலும் 'ஜோசுவா இமை போல் காக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிடியின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
மேலும் மணமகன் கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபராக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும் டிடி இந்த ஊடக அறிக்கைக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது;