மேலும் அறிய

Kajal Aggarwal | நினைச்ச டைம்ல முடியல..! இந்தியன் 2ல் இருந்து விலகுகும் காஜல்? நல்ல செய்திதான் காரணமாம்..!

இந்தியன் - 2  படத்தில் இருந்து பிரபல நடிகையான காஜல் அகர்வால் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா முதல் அலையின் போது, தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அண்மையில் தனது முதலாம் ஆண்டு திருமண நாள் குறித்து சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். 

சிக்கலில் இருக்கும் இந்தியன் 2 - என்னதான் பிரச்னை

   முன்னதாக, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பூஜையும் போடப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தயாரித்து வருகிற இந்தப்படத்தில் நடிகையாக காஜல் அகர்வாலும் பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிகர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.


Kajal Aggarwal | நினைச்ச டைம்ல முடியல..! இந்தியன் 2ல் இருந்து விலகுகும் காஜல்? நல்ல செய்திதான் காரணமாம்..!

படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் , கிரேன் நிலை தடுமாறி கீழே விழுந்து உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் சிறிது காலம் படப்படிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த தொடங்க சென்று விட்டார். இதனிடையே லைகா நிறுவனம் ஷங்கர் தரப்பு படத்தை விரைந்து முடித்துக்கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தப் பிரச்னையை விசாரித்த நீதிமன்றம் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியது. ஆனால் இருதரப்பிற்கும் இடையேயான பிரச்னை தீரவில்லை.  

இதனைத்தொடர்ந்து ஷங்கர் தரப்பு நீதிமன்றத்தில் சில காரணங்களை கூறி எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து ஷங்கரும் ராம் சரண் நடிக்கும் RC 15, அந்தியன் ரிமேக் என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்தப் பிரச்னை இவ்வாறாக சென்று கொண்டே இருந்த நிலையில் படம் வெளியாகுமா? வெளியாகதா என்ற கேள்வி எழுந்தது. 


Kajal Aggarwal | நினைச்ச டைம்ல முடியல..! இந்தியன் 2ல் இருந்து விலகுகும் காஜல்? நல்ல செய்திதான் காரணமாம்..!

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் விசாரணைக்கு வந்த இந்தியன் 2 வழக்கில், தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் தரப்பு இரண்டும் சுமூகமான நிலையை எட்டியதாக தெரிகிறது. மேலும் ஷங்கர் மற்ற படங்களை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு , முதலில் இந்தியன் 2 படத்திர்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்நிலையில் படத்தை வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் மறுதுவக்கம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் முதற்கட்டமாக, படக்குழு 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ஆனால் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை முடித்த பின்னரே ஷங்கர் இந்தப் படத்தில் கவனம் செலுத்துவார் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்
ரொம்ப மொக்கையா இருந்துச்சு...கார்த்திக் சுப்பராஜ் முன்னாடியே ரெட்ரோ படத்தை கழுவி ஊற்றிய மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget