மேலும் அறிய

Indian 2 Box Office: 2 நாள்களில் 80 கோடிகளைக் கடந்த இந்தியன் 2.. விமர்சனங்கள் தாண்டி எகிறும் வசூல்!

Indian 2 Box Office: இந்தியா முழுவதும் தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை கமல்ஹாசனின் இந்தியன் 2 வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு கோடை ஸ்பெஷலாக வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

தடைகளைத் தாண்டி வெளியான இந்தியன் 2

கடந்த 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, பின் ஷூட்டிங் ஸ்பாட் விபத்து, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட  பல்வேறு தடைகள் தாண்டி ஒரு வழியாக பல ஆண்டு எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு தற்போது இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.

லஞ்சம், ஊழலுக்கு எதிராகப் போராடிய இந்தியன் தாத்தாவான சேனாபதியின் மீள் வருகை, தற்போதைய அரசியல் சூழலில் அவரது செயல்கள் ஆகியவற்றை மையப்படுத்தி நேற்று முன் தினம் வெளியாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில், கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அதிருப்தி விமர்சனம் தாண்டி வசூலில் மாஸ்

இந்நிலையில், இந்தியன் முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இந்தியன் 2 திரைப்படம் அதிருப்தி விமர்சனங்களையும் மற்றொருபுறம் கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பு, பாடல் காட்சிகள் ஆகியவை பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ள தகவலின்படி, இந்தியன் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 25.6 கோடிகள், இரண்டாவது நாளில் 16.7 கோடிகள் என மொத்தம் 42.3 கோடிகளை வசூலித்துள்ளது. இந்தியா முழுவதும் தமிழில் மட்டும் 29.5 கோடிகள், இந்தியில் 2.4 கோடிகள், தெலுங்கில் 10.4 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் உலக அளவில் இந்தியன் 2 திரைப்படம் ரூ.85 கோடிகளுக்கும் மேல் 2 நாள்களில் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று வழக்கமாக மக்கள் தியேட்டர்களுக்குப்  படையெடுக்கும் நிலையில், இன்றுடன் இந்தியன் 2 திரைப்படம் ரூ.100 கோடிகள் என்ற மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
அடுத்த 2 மணி நேரத்தில் வெளுக்கப்போகும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
Cyclone Akwan: நவம்பர் 16ல் உருவாகிறது புயல்.. அக்வான் என்றால் என்ன தெரியுமா? தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சிக்கிய 70,674 போலி புத்தகங்கள் - மலைக்க வைக்கும் முறைகேடு: மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
TVK: கொள்முதல் விலை குறைவு.. கூடுதல் வசதிகள்! மாணவர்களுக்கான சைக்கிள் டெண்டரில் தவெக பெருமிதம்
"விழிபிதுங்கும் காவல்துறை, அஜாக்கிரதையின் வெளிப்பாடு": தமிழக அரசை சாடிய வானதி - ஏன் தெரியுமா?
Udhayanidhi: SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
SC/ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை..! இழுத்தடிக்கும் அரசு? ஸ்டாலின், உதயநிதி காட்டம்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Embed widget